விமர்சனம்
பாஸ்கர் ஒரு ராஸ்கல்

பாஸ்கர் ஒரு ராஸ்கல்
அரவிந்த் சாமி, நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, மாஸ்டர் ராகவ் அமலா பால், பேபி நைனிகா சித்திக் அம்ரேஷ் கணேஷ் விஜய் உலகநாதன்,
மனைவியை இழந்த வசதியான அரவிந்தசாமி, அரவிந்தசாமியின் அடிதடி தகராறை வெறுக்கும் ஒரே மகன் ராகவ். நைனிகாவுக்கு அப்பா இல்லை. அம்மா அமலாபாலுடன் வசிக்கிறார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் சினிமா விமர்சனம் பார்க்கலாம்.
Chennai
மனைவியை இழந்த வசதியான அரவிந்தசாமி படிப்பறிவு இல்லாத முரடர். அடிதடி தகராறு என்று திரியும் அவரை ஒரே மகன் ராகவ் வெறுக்கிறான். ராகவின் பள்ளி தோழி நைனிகா, அரவிந்தசாமியின் அடாவடிகளை ரசிக்கிறார். நைனிகாவுக்கு அப்பா இல்லை. அம்மா அமலாபாலுடன் வசிக்கிறார்.

இரு குழந்தைகளும் அரவிந்தசாமி-அமலாபாலை காதலிக்க வைத்தால் ஒரே வீட்டில் வசிக்கலாம் என்று வினோதமாக சிந்தித்து காய் நகர்த்துகிறார்கள். அரவிந்தசாமியும், அமலாபாலும் நெருங்கும்போது திடுதிப்பென்று இறந்துபோனதாக கருதப்பட்ட கணவன் வந்து நிற்கிறான். அமலாபால் பிளாஸ்பேக் முடிச்சுகளும், அரவிந்தசாமியுடன் அவர் சேர்ந்தாரா? என்பதும் மீதி கதை.

மலையாளத்தில் மம்முட்டி நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் ‘ரீமேக்’காக வந்துள்ளது. முறுக்கு மீசை, முறைத்த பார்வை, வேட்டி- சட்டை, கழுத்தில் தங்க சங்கிலி, கோபம், அடிதடி என்று முரட்டுத்தனம் காட்டுகிறார் அரவிந்தசாமி. சண்டை காட்சிகளில் வேகம். குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் மோதலில் ரவுடிகளை துவம்சம் செய்து தெறிக்க விடுகிறார். அமலாபால் மீது ஆசைப்படும்போது அப்பாவித்தனம்.

ஏழு வயது பெண் குழந்தைக்கு தாயாக வருகிறார் அமலாபால். கணவனை இழந்த கதையை மகளிடம் சொல்லும்போது அனுதாபம் அள்ளுகிறார். மாடர்ன் உடையில் கவர்ச்சி விருந்தும் அளிக்கிறார். ராகவ்வும், நைனிகாவும் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். வயதுக்கு மீறிய அவர்கள் பேச்சில் சினிமாத்தனம் தெரிந்தாலும் ரசிக்க வைக்கிறது.

சூரி, ரோபோ சங்கர் கூட்டணியின் நகைச்சுவையில் தியேட்டர் குலுங்குகிறது. நாசர் முதிர்ச்சியான நடிப்பில் மனதில் நிற்கிறார். நடிகையாக வரும் நிகிஷா படேல், ரமேஷ்கண்னா கதாபாத்திரங்களும் நிறைவு. திருமணமாகி துணைகளை இழந்து நிற்கும் ஆணையும், பெண்ணையும் சேர்த்து வைக்கும் கதையை அடிதடி, நகைச்சுவை என்று ஜனரஞ்சகமாக நகர்த்துகிறார் இயக்குனர் சித்திக். பிற்பகுதி காதலை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கலாம். அமரேஷ் இசையில் பாடல்கள் கேட்கலாம். உலகநாதன் கேமரா காட்சிகளை அழகாக்கி இருக்கிறது.

முன்னோட்டம்

நதி

அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 01, 07:54 PM

யானை

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 01, 05:06 PM

ருத்ர தாண்டவம்

மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 30, 08:05 PM
மேலும் முன்னோட்டம்