விமர்சனம்
வெள்ளை பூக்கள்

வெள்ளை பூக்கள்
விவேக், சார்லி பூஜா தேவாரியா விவகே் இளங்கோவன் ராம்கோபால் கிருஷ்ணராஜூ ஜெரால்டு பீட்டர்
விவேக் நண்பராக வரும் சார்லி அனுபவ நடிப்பால் கவர்கிறார். விவேக் மகனாக வரும் தேவ், மருமகளாக வரும் பேய்ஸ் ஹேண்டர்சன், பூஜா தேவரியா கதாபாத்திரங்களும் நிறைவு. படம் சினிமா விமர்சனம்.
Chennai
போலீஸ் அதிகாரி விவேக் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். வெளிநாட்டு பெண்ணை காதலித்து மணந்து அமெரிக்காவில் வசிக்கும் மகனிடம் பல வருடங்களாக பேசாமல் இருக்கும் அவர் நண்பர் வற்புறுத்தலால் அவனை பார்க்க செல்கிறார். அங்கு மகனும் மருமகளும் அவரை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். ஆனாலும் மருமகளுடன் பேசுவதை தவிர்க்கிறார். மகன் வீட்டின் அருகே போதை மருந்து கடத்தும் கும்பல் நடமாட்டம் இருக்கிறது. ஒரு பெண் கடத்தப்படுகிறாள். இன்னொரு இளைஞனையும் தாக்கி கடத்துகின்றனர்.

அமெரிக்க போலீசுக்கு தெரியாமல் சார்லியுடன் சேர்ந்து விவேக் போலீஸ் மூளையை பயன்படுத்தி ரகசியமாக புலனாய்வு செய்கிறார். அப்போது இளம்பெண் கொல்லப்பட்டு புதருக்குள் கிடப்பதை பார்த்து அதிர்கிறார். அடுத்து விவேக் மகனும் கடத்தப்படுகிறான். கடத்தியது யார்? குற்றவாளியை விவேக் கண்டுபிடித்தாரா? என்பது அதிர்ச்சியான கிளைமாக்ஸ்.

விவேக் திரை வாழ்க்கையில் மைல் கல் படம். நகைச்சுவையில் இருந்து கதை நாயகனாக உயர்ந்து இருக்கிறார். கொலை எப்படி நடந்து இருக்கும் என்பதை தனக்குள் உருவகப்படுத்தி குற்றவாளியை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் அவர் தாய், மகளை கொன்றவனை அதே பாணியில் துப்பு துலக்கி கைது செய்யும் ஆரம்ப காட்சியிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.

அமெரிக்காவுக்கு நகரும் கதையில் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து வெளிநாட்டு காதலியை மணந்து வாழும் மகன் மீது வருத்தம் மருமகள் மீது வெறுப்பு என்று சீரியஸ் முகத்தில் இன்னொரு பரிமாணம் காட்டுகிறார். கடத்தல்காரனை பிடிக்க தனது பாணியில் நடத்தும் கற்பனை விசாரணைகள் விறுவிறுப்பை தருகின்றன. மகன் கடத்தப்பட்டதும் கதறி அழுது குணசித்திர நடிப்பிலும் உச்சம் தொடுகிறார்.

விவேக் நண்பராக வரும் சார்லி அனுபவ நடிப்பால் கவர்கிறார். விவேக் மகனாக வரும் தேவ், மருமகளாக வரும் பேய்ஸ் ஹேண்டர்சன், பூஜா தேவரியா கதாபாத்திரங்களும் நிறைவு. வெளிநாட்டு நடிகர்கள் அதிகம் இருப்பதால் அன்னியம் தெரிகிறது. குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து இரு கதைகளை வெவ்வேறு தளத்தில் நகர்த்தி ஒரு இடத்தில் இணைத்து திகிலூட்டியதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் விவேக் இளங்கோவன். கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம். ராம்கோபால் கிருஷ்ணம் ராஜுவின் பின்னணி இசை திகில் கதைக்கு உதவி இருக்கிறது. ஜெரால்ட் பீட்டரின் கேமரா அமெரிக்க அழகை கண்முன் நிறுத்துகிறது.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்