விமர்சனம்
நட்புனா என்னான்னு தெரியுமா

நட்புனா என்னான்னு தெரியுமா
புதுமுகம் கவின் ரம்யா நம்பீசன் சிவா அரவிந்த் தரண் யுவா
கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பத்தாவது வகுப்பில் ஒரு பெண்ணால் கவின் படிப்பு பாதிக்கிறது. இதனால் திருமணமே செய்து கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். திருமணத்தை நடத்தி கொடுக்கும் நிறுவனம் தொடங்கி சுயமாக தொழில் செய்கின்றனர்.
Chennai
ரம்யா ரம்பீசனை சந்திக்கும் ராஜு ஒரு தலைக்காதலோடு பின்னால் சுற்றுகிறார். ரம்யா நம்பீசன் அழகில் மயங்கி கவினும் காதலிக்க ஆரம்பிக்கிறார். ராஜுவை முந்திக்கொண்டு காதலையும் சொல்லி விடுகிறார். கவின் காதலை ரம்யா நம்பீசனும் ஏற்கிறார். பிறகு ராஜுவுக்கு தெரியாமலேயே சந்தித்து காதலை வளர்க்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த காதல் தெரிந்து அதிர்ச்சியாகும் ராஜுவும், அருண்ராஜா காமராஜுவும் நட்பை முறித்து கவினை பிரிகிறார்கள். நண்பர்கள் மீண்டும் சேர்ந்தார்களா? கவின் ரம்யா நம்பீசன் காதல் என்ன ஆனது? என்பது மீதி கதை..

நண்பர்களின் காமெடி, கலாட்டா என்று நகரும் கதையில் ரம்யா நம்பீசன் வரவுக்கு பிறகு திருப்பம். நண்பன் விரும்பும் பெண்ணை தந்திரமாக காதலில் வீழ்த்தி கவின் இன்னொரு முகம் காட்டுகிறார். விஷம் குடித்த நண்பனை காப்பாற்ற துடித்தும், நண்பர்களுக்காக காதலியை உதற தயாராகியும் நட்பில் அழுத்தமும் பதிக்கிறார்.

ரம்யா நம்பீசன் காதலையும் தந்தை பாசத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்தில் ஒன்றி இருக்கிறார். காதல் தோல்வியில் தவிக்கும் ராஜுவின் அப்பாவித்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. சீரியஸ் முகத்தில் சிரிக்கவும் வைக்கிறார். அருண்ராஜா காமராஜின் நகைச்சுவை காட்சிகள் தியேட்டரை குலுங்க வைக்கிறது. இளவரசு, மன்சூர் அலிகான், நரேன், அழகம் பெருமாள், மொட்டை ராஜேந்திரன், ரமா ஆகியோர் அனுபவ நடிப்பால் கவர்கிறார்கள்.

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதையை பிறகு காதல் முடிச்சு, நண்பர்கள் மோதல், போலீஸ் என்று விறுவிறுப்பும் கலகலப்புமாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் சிவா அரவிந்த். தரண்குமார் இசையில் பாடல்கள் கேட்கலாம். யுவராஜ் ஒளிப்பதிவும் பக்க பலம்.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்