விமர்சனம்
முகமூடி அணிந்து வில்லன்களை பந்தாடும் சூப்பர் ஹீரோ சாகசங்கள் படம் ஹீரோ - விமர்சனம்

முகமூடி அணிந்து வில்லன்களை பந்தாடும் சூப்பர் ஹீரோ சாகசங்கள் படம் ஹீரோ - விமர்சனம்
சிவகார்த்திகேயன் கல்யாணி பிரியதர்ஷன் பி.எஸ்.மித்ரன் யுவன் ஷங்கர் ராஜா ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஹீரோ’ படத்தின் முன்னோட்டம்.
Chennai
சிறுவயதில் சக்திமான் தொடரை தொலைக்காட்சியில் பார்த்து வளரும் சிவகார்த்திகேயனுக்கு எதிர்காலத்தில் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்று கனவு. அது கற்பனை கதாபாத்திரம் என்பதை உணர்த்தும் தந்தை, படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை சொல்கிறார். நன்றாக படித்து பிளஸ்-2 தேர்வில் மாவட்டத்தில் முதல் மாணவனாக தேறுகிறார், சிவகார்த்திகேயன். அப்போது உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் தந்தையை காப்பாற்ற பணம் தேவைப்பட பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை விற்கிறார்.

அதன் பிறகு சென்னையில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடித்து கொடுத்தும், கல்லூரியில் மாணவர்களை சேர்த்து விட்டு ‘கமிஷன்’ வாங்கியும் பிழைப்பு நடத்துகிறார். சமூக சேவை செய்யும் கல்யாணி மீது காதல்வசப்படுகிறார். இன்னொரு புறம், பெரிய கல்வி நிறுவனங்கள் நடத்தும் அபிதியோல், மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டால் கார்ப்பரேட் தொழில்கள் முடங்கும் என்று அவர்களை யோசிக்க விடாமல் தடுக்கிறார்.

அவரால் பாதிக்கப்படும் அர்ஜுன் ரகசிய பள்ளி நடத்தி, மாணவர்கள் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அவர்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறார். அந்த பள்ளியில் உப்பு தண்ணீரில் இயங்கும் மோட்டாரை கண்டு பிடிக்கும் ஏழை மாணவி இவானாவுக்கு தனது கண்டுபிடிப்பை காட்டி பெரிய கல்லூரியில் ‘சீட்’ வாங்கி கொடுக்கிறார், சிவகார்த்திகேயன். அதன்பிறகு எல்லோரையும் ஆபத்துகள் சூழ்கிறது. இதில் இவானா பலியாகிறார். சிவகார்த்திகேயன், அர்ஜுன் ஆகிய இருவரையும் கொல்லவும் சதி நடக்கிறது. அதில் இருந்து இருவரும் மீண்டார்களா, மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வந்தனவா? என்பது மீதி கதை.

சிவகார்த்திகேயனுக்கு வழக்கமான காமெடியாக இல்லாமல் சமூக அவலங்களை சாடி, அதிரடி காட்டும் அழுத்தமான கதாபாத்திரம். அதை திறமையாக செய்துள்ளார். போலி மதிப்பெண்கள் அச்சடித்து கொடுக்கும் காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். காதலுடன் கல்யாணியின் பின்னால் சுற்றுகிறார். இவானாவை காப்பாற்ற முயற்சிப்பதும், கண் எதிரே அவர் ரெயிலில் இருந்து விழுந்து இறப்பதை பார்த்து துடிப்பதும், அழுத்தமான நடிப்பு. அதன் பிறகு அதிரடியில் பாய்ச்சல் காட்டுகிறார். முகமூடி அணிந்து வில்லன்களை பந்தாடும் சூப்பர் ஹீரோ சாகசங்கள் ரசிக்க வைக்கின்றன.

கார்ப்பரேட் முதலாளிகள் கண்ணில் படாமல் ரகசிய பள்ளி நடத்தி, மாணவர்களின் அறிவை கண்டுபிடிப்புகளில் பயன்படுத்தும் அர்ஜூன் இன்னொரு ஹீரோவாக வருகிறார். முகமூடி அணிந்து கொள்ளையடிப்பது, சிவகார்த்திகேயனை காப்பாற்றுவது, வில்லன்களிடம் ஆவேசமாக சண்டை போடுவது என்று அவரது கதாபாத்திரம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் அழகான காதலி. சிவகார்த்திகேயனின் மோசடியை கண்டிக்கும் இடத்தில் நடிப்பு திறமையும் பளிச்சிடுகிறது.

இவானா கதாபாத்திரமும் கச்சிதம். திருடி என்று பழிசுமத்தியதை தாங்க முடியாமல் அவர் எடுக்கும் முடிவு, அதிர வைக்கிறது.

சூப்பர் ஹீரோ சாகசங்களை இன்னும் வலுவாக காட்சிப்படுத்தி இருக்கலாம். அபிதியோல் கார்ப்பரேட் வில்லனாக மிரட்டுகிறார். ரோபோ சங்கர் சிரிக்க வைக்கிறார். மாணவர்களின் அறிவு திறமைகளை சமூக அக்கறையோடு அலசும் கதையம்சத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். சூப்பர் ஹீரோ சாகசங்களை இன்னும் மனதில் பதிகிற மாதிரி காட்சிப்படுத்தி இருக்கலாம். ஜார்ஜ் வில்லியம்சின் கேமரா, காட்சிகளை பிரமாண்டமாக காட்டுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்துடன் ஒன்ற வைக்கிறது.

முன்னோட்டம்

மாஸ்டர்

விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 17, 05:33 AM

சக்ரா

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 13, 12:13 AM

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

மோகன்லாலும், பிரபுவும் 25 ஆண்டுகளுக்குபின் `மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

பதிவு: மார்ச் 11, 03:39 AM
மேலும் முன்னோட்டம்