விமர்சனம்
மருத்துவ கழிவுகளும், அதனால் பரவும் நோய்களும் - கல்தா

மருத்துவ கழிவுகளும், அதனால் பரவும் நோய்களும் - கல்தா
ஆண்டனி, சிவ நிஷாந்த் அய்ரா, திவ்யா செ.ஹரி உத்ரா ஜெய் கிரிஷ் பி. வாசு
தமிழ்நாட்டின் எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் பற்றிய உண்மை சம்பவம் படமாகி இருக்கிறது. படம் கல்தா விமர்சனம் பார்க்கலாம்.
Chennai
கதையின் கரு:  கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழ்நாட்டின் எல்லையோரம் உள்ள ஒரு கிராமத்தில் கொட்டுகிறார்கள். அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமான அந்த செயலுக்கு ஆதரவாக இருக்கிறார், உள்ளூர் கவுன்சிலர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், ஆண்டனி (‘மேற்கு தொடர்ச்சி மலை’ புகழ்) இருப்பினும் மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையில் கொட்டப்படுவது நிற்கவில்லை. ஊரே உறங்குகிற நேரம் பார்த்து, ரகசியமாக மருத்துவ கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.

இதனால் அந்த கிராமவாசிகள் முக்கால்வாசி பேர் விசித்திரமான நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டனி ஊரை கூட்டி போராட்டம் நடத்துகிறார். இந்த நிலையில், ஆண்டனியின் மனைவி அந்த விசித்திர நோய்க்கு பலியாகிறார். இதனால் ஆண்டனி விரக்தி அடைந்து குடிபோதைக்கு அடிமை ஆகிறார். இதுதான் சரியான நேரம் என்று வில்லன் கும்பல், ஆண்டனியை போட்டுத்தள்ளுகிறது.

அதன் பிறகு அந்த கிராமம் என்ன ஆகிறது, விசித்திர நோயின் பாதிப்பில் இருந்து கிராமவாசிகள் தப்பினார்களா, இல்லையா? என்ற கேள்விக்கு பதில் உச்சக்கட்ட காட்சியில் இருக்கிறது.

ஆண்டனி, கிராமத்து இளைஞர் வேடத்துக்கு பொருந்துகிறார். மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவது, மனைவியின் நோய் பாதிப்பை கண்டு கலங்குவது, மனைவியின் மரணத்துக்கு பிறகு குடிகாரராக மாறுவது என மாறுபட்ட உணர்ச்சிகளை தன் நடிப்பில் கொண்டு வந்து, சிறந்த நடிகர் என்று நிரூபிக்கிறார்.

அவருடைய மனைவியாக வரும் திவ்யா, விசித்திர நோய்க்கு பலியாகி அனுதாபங்களை அள்ளுகிறார். அப்புக்குட்டிக்கு வில்லன் முகம் காட்டி, பின்னர் திருந்துவது போன்ற வேடம். கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து இருக்கிறார். அய்ரா, கஜராஜ், ராஜசிம்மன், டைகர் தங்கராஜ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் படத்தின் ஜீவனாக அமைந்துள்ளன.

கே.ஜெய் கிரி‌‌ஷ் இசையில், பாடல்களில் கிராமத்து மணம் வீசுகிறது. வாசுவின் ஒளிப்பதிவு, கிராமத்து யதார்த்தங்களை அப்படியே பதிவு செய்து இருக்கிறது. உண்மை சம்பவத்தை கருவாக வைத்துக் கொண்டு டைரக்டர் எஸ்.ஹரி உத்ரா மருத்துவ கழிவுகள் மூலம் வியாதிகள் பரவுகின்றன என்ற கனமான உண்மையை திரைக்கதையாக்கி இருக்கிறார். பாராட்டுகள். இந்த கதைக்கு தொடர்பில்லாத கிளை கதைகள், படத்தின் வேகத்தை குறைக்கின்றன. வில்லன் அப்புக்குட்டி திடீர் என்று நல்லவராக மாறுவதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை.

முன்னோட்டம்

பொன்மகள் வந்தாள்

ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.

பதிவு: மே 29, 11:09 PM

மாஸ்டர்

விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 17, 05:33 AM

சக்ரா

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 13, 12:13 AM
மேலும் முன்னோட்டம்