விமர்சனம்
காதலை தேடி அலையும் கதாநாயகனும், காதல் வலையில் சிக்க விரும்பாத கதாநாயகியும்! படம் நானும் சிங்கிள்தான் - விமர்சனம்

காதலை தேடி அலையும் கதாநாயகனும், காதல் வலையில் சிக்க விரும்பாத கதாநாயகியும்! படம் நானும் சிங்கிள்தான் - விமர்சனம்
தினேஷ் தீப்தி திவேஸ் ஆர். கோபி ஹித்தேஷ் மஞ்சுநாத் கே.ஆனந்தராஜ்
‘‘காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை’’ என்று கூறும் அவரிடம், ‘‘அப்படியானால் இருவரும் நண்பர்களாக இருக்கலாம்’’ நானும் சிங்கிள்தான் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
Chennai
கதாநாயகன் ‘அட்டகத்தி’ தினேஷ், டாட்டூ போடும் தொழில் நடத்தி வருகிறார். அவருக்கு ஐ.டி.யில் வேலை செய்யும் தீப்தி சதி மீது காதல் வருகிறது. தீப்தியை தினேஷ் விரட்டி விரட்டி காதலிக்கிறார். ‘‘நான் சிங்கிளாக வாழவே விரும்புகிறேன். காதல்...கத்தரிக்காயில் எல்லாம் நம்பிக்கை இல்லை’’ என்கிறார், தீப்தி.

இந்த நிலையில், அவர் திடீரென்று காணாமல் போகிறார். அவரைத் தேடி அலைகிறார், தினேஷ். அப்போது தீப்தி லண்டன் போய்விட்ட தகவல் தெரியவருகிறது. தினேஷ் காதலியை சந்திக்க நண்பர்களுடன் லண்டன் பறக்கிறார். அங்கு அவர் ஒரு விபத்தில் சிக்குகிறார். தீப்தி ரத்தம் கொடுத்து தினேசை காப்பாற்றுகிறார்.

தீப்தி மீதான காதலை தினேஷ் தொடர ஆசைப்படுகிறார். அதற்கு தீப்தி மறுக்கிறார். ‘‘காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை’’ என்று கூறும் அவரிடம், ‘‘அப்படியானால் இருவரும் நண்பர்களாக இருக்கலாம்’’ என்று தினேஷ் யோசனை சொல்கிறார். அதை ஏற்றுக்கொள்ளும் தீப்தி தனது எதிர்கால வாழ்க்கைக்காக ஒரு புரட்சிகரமான முடிவு எடுக்கிறார். அந்த முடிவு என்ன? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

தினேஷ் சராசரி நடுத்தர வகுப்பு இளைஞராக படம் முழுக்க வருகிறார். நடிப்பில், பக்கத்து வீட்டு இளைஞரை பார்த்த உணர்வு. கதாநாயகியாக தீப்தி, மிக சரியான தேர்வு. லண்டனில் உள்ள எப்.எம். ரேடியோவின் ஜாக்கியாக மொட்ட ராஜேந்திரன், அப்பா வேடத்தில் மனோபாலா, புது காமெடியன் கதிர் ஆகிய மூன்று பேரும் வரும் காட்சிகளில் தியேட்டரில் ஆரவாரம்.

கே.ஆனந்தராஜ் ஒளிப்பதிவில் லண்டன் தொடர்பான காட்சிகள், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஏ.ஆர்.ரகுமான் உதவியாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், கதையுடன் ஒன்ற வைக்கின்றன.

டைரக்டர் ஆர்.கோபி விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். படத்தின் கடைசி காட்சிகள், கலகலப்பின் உச்சம்.

முன்னோட்டம்

சூ மந்திரகாளி

ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூ மந்திரகாளி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 14, 07:08 PM

பகவான்

காளிங்கன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா நடிப்பில் உருவாகி இருக்கும் பகவான் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 14, 04:14 PM

வாஸ்கோடகாமா

நகுல் நடிப்பில் உருவாக இருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 100 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 14, 03:11 PM
மேலும் முன்னோட்டம்