புராஜெக்ட் அக்னி - நவரசா விமர்சனம்


புராஜெக்ட் அக்னி - நவரசா விமர்சனம்
x
தினத்தந்தி 12 Aug 2021 5:00 PM GMT (Updated: 2021-08-12T22:30:26+05:30)

நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். "புராஜெக்ட் அக்னி" கதையின் விமர்சனம்.

படத்தின் கதைப்படி விஞ்ஞானியாக இருக்கும் அரவிந்த்சாமி இஸ்ரோவில் பணிபுரிந்து வருகிறார். தான் ஒரு அதிசயமான விஷயத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், அதுபற்றி பேச தனது நண்பரான பிரசன்னாவுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர் கண்டுபிடித்தது என்ன?, அதன் விளைவுகள் என்ன? என்பதே புராஜெக்ட் அக்னி படத்தின் மீதிக்கதை.

விஞ்ஞானியாக வரும் அரவிந்த் சாமி ஹாலிவுட் நடிகரின் பாணியில் நடித்துள்ளார். மறுபுறம் பிரசன்னா, அலட்டிக்கொள்ளாத நடிப்பில் கவனிக்க வைக்கிறார். பூர்ணா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். 

நவரசத்தில் ஆச்சரியம் என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த 'நவரசா' ஆந்தாலஜியில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘புராஜெக்ட் அக்னி’ தனித்து நிற்கிறது. இதற்கு இயக்குனர் கார்த்திக் நரேனைப் பாராட்டலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காதது. கதைகருவுக்கு ஏற்றபடி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

ரான் எத்தன் யோஹனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அபிநந்தன் ராமானுஜனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி இருப்பதோடு, கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘புராஜெக்ட் அக்னி’ ஆச்சரியம்.

Next Story