அழகான பேய் - சிண்ட்ரல்லா விமர்சனம்


அழகான பேய் - சிண்ட்ரல்லா விமர்சனம்
x
தினத்தந்தி 28 Sep 2021 9:24 AM GMT (Updated: 28 Sep 2021 9:24 AM GMT)

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் சிண்ட்ரெல்லா படத்தின் விமர்சனம்.

ராய்லட்சுமி 2 வேடங்களில் நடித்துள்ள படம்.

காடுகளையும், அங்கேயுள்ள ஜீவராசிகளையும் படம்பிடிக்க ராய்லட்சுமியும், அவருடைய நண்பர்களும் காரில் புறப்பட்டு செல்கிறார்கள். நடுக்காட்டுக்குள் உள்ள ஒரு பங்களாவில் தங்குகிறார்கள். அந்த காட்டு பங்களாவில் அவர்களுக்கு ஏற்படும் திகிலான அனுபவங்கள்தான் படம்.

புகைப்பட கலைஞர் அகிரா, வீட்டு வேலைக்காரி துளசி ஆகிய 2 வேடங்களில் ராய்லட்சுமி வருகிறார். இரண்டு வேடங்களுக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். புகைப்பட கலைஞரான ராய்லட்சுமிக்கு அந்த காட்டு பங்களாவுக்குள் ஏற்படும் அனுபவங்கள், சிலிர்க்க வைக்கின்றன.

வேலைக்கார பெண் துளசி சிண்ட்ரல்லா உடைக்கு ஆசைப்படுவதும், அதன் விளைவுகளும் சோகம் நிறைந்த திகில். வில்லியாக சாக்சி அகர்வால், மிரட்டியிருக்கிறார்.

ராமியின் கேமரா காடுகளின் அழகையும், அபாயங்களையும் அள்ளி வந்து இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் திகில் கூட்டியிருக்கலாம். வினோ வெங்கடேஷ் டைரக்டு செய்து இருக்கிறார். எல்லா பேய் படங்களிலும் உள்ள சீன்கள் இந்த படத்திலும் இருப்பதால் கதையும், காட்சிகளும் பயமுறுத்த தவறிவிட்டன.

இருப்பினும் விறுவிறுப்பான திரைக்கதை டைரக்டர் வினோ வெங்கடேசின் பெயர் சொல்கிறது.


Next Story