ஜமாபந்தியில் கலெக்டர் மனுக்கள் பெற்றார்
நாட்டறம்பள்ளியில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு மனுக்கள் பெற்றார்.
ஜமாபந்தி
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 52 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 32 மனுக்கள் ஏற்கப்பட்டது. 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கிராமங்களில் வருவாய்த்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு வகையான கணக்கு பதிவேடுகள் சரி பார்க்கப்பட்டது. 2 பயனாளிகளுக்கு உட்பிரிவு செய்து நத்தம் பட்டாக்களுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி கவுன்சிலர் இல.குருசேவ் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
பங்கேற்றோர்
பின்னர் நில அளவீடு செய்யும் சங்கிலிகளை பார்வையிட்டு உறுதி செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், உதவி இயக்குனர் (நில அளவை) செந்தில்குமார், அலுவலக மேலாளர் (நீதியியல்) உமாரம்பா, தாசில்தார் குமார், தனி தாசில்தார் சுமதி, வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.