சினிமா செய்திகள்

தனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி பேட்டி + "||" + About Dhanush - Ajith Interview with visiting film director Atlee

தனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி பேட்டி

தனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி பேட்டி
தனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி கூறி உள்ளார்.
சென்னை,

பிகில்  படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனர்  அட்லி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: படத்தில் 2 விஜய்யா? 3 விஜய்யா?

அட்லி : எனக்கு கணக்கு வராது ப்ரோ.

கேள்வி: தீம் மியூஸிக் இருக்கா?

அட்லி : ராயப்பன், மைக்கேல், பிகில்னு நிறைய தீம் மியூஸிக் இருக்கு ப்ரோ. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

கேள்வி: உங்க ஃபேவரிட் கேரக்டர் எது? ராயப்பன்? பிகில்? மைக்கேல்?

அட்லி : எப்போதுமே ராயப்பன்.

கேள்வி: இந்தப் படத்தில் நயன்தாரா கேரக்டர் பற்றி சொல்லுங்க...

அட்லி : உணர்வுபூர்வமானவர் மற்றும் உற்சாகமூட்டக் கூடியவர். அவர்தான் படத்தின் தேவதை. என்னுடைய டார்லிங்.

கேள்வி: ஜாக்கி ஷெராஃப்புடன் பணியாற்றிய அனுபவம்?

அட்லி : ஜாக்கி என்னுடைய நண்பர். உங்கள் மீது மிகப்பெரிய மரியாதையும் அன்பும் இருக்கிறது சார். உங்களுடன் பணியாற்றியது சர்ப்ரைஸான விஷயம்.

கேள்வி: தனுஷ் கூட ஒரு படம் பண்ணுவீங்களா?

அட்லி : தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். கண்டிப்பாகப் பண்ணுவோம்.

கேள்வி: அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க...

அட்லி : அஜித் சார் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னுடைய சமீபத்திய விருப்பங்கள் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’.

கேள்வி: உங்களுக்குப் பிடித்த விஜய் டயலாக்?

அட்லி : எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.

கேள்வி: ‘தளபதி 64’ படம் பற்றி என்ன நினைக்குறீங்க?

அட்லி : லோகேஷ் கனகராஜின் ஒர்க் எனக்குப் பிடிக்கும். ‘கைதி’ மற்றும் ‘தளபதி 64’ படங்களுக்கு வாழ்த்துகள் நண்பா.

கேள்வி: ஜுனியர் என்.டி.ஆர். பற்றி சொல்லுங்க...

அட்லி : அவர்மீது மிகப்பெரிய மரியாதையும், அளவில்லா அன்பும் உள்ளது. ஒவ்வொரு படத்துக்கும் என்னை அழைத்துப் பாராட்டுவார். என்னுடைய எல்லா ஒர்க்கும் அவருக்குப் பிடிக்கும். நாளைக்கு என்ன சொல்றார்னு பார்ப்போம்.

கேள்வி: படத்தின் ஒன்லைனைச் சொல்ல முடியுமா?

அட்லி : ஹேப்பி பிகில் தீபாவளி நண்பா. நேத்து வரைக்கும் இது என் படம். இனிமே இது உங்க படம்.

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் ஜோடியாக ஹன்சிகா
தனுஷ் ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர் அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
3. தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’
தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’ செய்யப்பட உள்ளது.
4. திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்