பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடிய பாடலின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரில் ஒருவராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின. 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள பாடலான “ஜாலியோ ஜிம்கானா” வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிடப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தில் ஏற்கனவே முதல் பாடலாக “அரபிக்குத்து” வெளியான நிலையில் தற்போது இரண்டாம் பாடலாக “ஜாலியோ ஜிம்கானா” வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Jolly ah irunga Nanba! 🤩#BeastSecondSingle - #JollyOGymkhana sung by Thalapathy @actorvijay is releasing on March 19th!@Nelsondilpkumar@anirudhofficial@kukarthik1@hegdepooja@manojdft@AlwaysJani#Beast#BeastUpdatepic.twitter.com/1C6JcDTi9Q
— Sun Pictures (@sunpictures) March 16, 2022
Related Tags :
Next Story