மற்றவை

தைரியத்தால் உயர்ந்து நின்ற இந்திரா + "||" + Indira stood up with courage

தைரியத்தால் உயர்ந்து நின்ற இந்திரா

தைரியத்தால் உயர்ந்து நின்ற இந்திரா
பெண்ணுக்கு உரியதாகக் கூறப்பட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்டவராக விளங்கினார் இந்திரா. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகள் போன்றவற்றை துணிச்சலோடு மேற்கொண்டார்.
ந்தியாவின் முதல் பெண் பிரதமர், இந்திரா பிரியதர்ஷினி காந்தி. இளம் வயதிலேயே தாயை இழந்தவர். இவரது தந்தை ஜவஹர்லால் நேரு சுதந்திரப் போராட்டத்தின் காரணமாக பல காலம் சிறையில் இருந்ததால், இந்திராவுக்கு தந்தையின் அன்பும் முழுமையாக கிடைக்கவில்லை. துணிச்சலும், தெளிவான சிந்தனையும், திட்டமிடுதலும் இவரது பலமாக இருந்தன. 

பெண்ணுக்கு உரியதாகக் கூறப்பட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்டவராக விளங்கினார் இந்திரா. அரசியலில் ஆர்வம் கொண்ட இந்திரா 1966-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். எத்தனை எதிர்ப்புகள் எழுந்தாலும் அவற்றை லாவகமாக கையாண்டு தன்னை மேலும் வலிமையாக்கிக் கொண்டார். 

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் போர் நடவடிக்கைகள், தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள், நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகள் போன்றவற்றை துணிச்சலோடு மேற்கொண்டார். வங்கிகளை தேசியமயமாக்கி பாகுபாட்டை உடைத்தார். 

விவசாயத்தின் வளர்ச்சியான பசுமை புரட்சிக்கு வித்திட்டார். அணுசக்தி துறையில் மேம்பட்ட நாடாக இந்தியாவை உருவாக்கினார். ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிய மறுத்தார். மற்ற நாடுகளுடன் நட்புறவை பேணி பொருளாதாரத்தை மேம்படுத்தினார்.




1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி தனது மெய்க்காவலர்களால் சுடப்பட்டு மரணம் அடைந்தார். வாழ்ந்தபோதும், இறந்த பின்பும் தைரியமான தலைவர்களின் பட்டியலில் இவரது பெயர் நிலைத்து இருக்கிறது.
தோல்வியைக் கண்டு இவர் துவண்டது இல்லை. 

எதிர்ப்புகளைக் கண்டு மிரண்டது இல்லை. சிக்கலான தருணங்களில் தைரியமாக முடிவெடுத்தார். பிறரின் விமர்சனங்களுக்கு அஞ்சாமல், தான் கொண்ட கடமையில் செம்மையாக செயல்பட்டார். 

இன்றைய காலகட்டத்தில் பல தருணங்களில் இத்தகைய குணங்கள் பெண்களுக்கு அவசியமானவை. இந்திராவின் துணிச்சலான வாழ்க்கை வரலாறு, பல பெண்களுக்கு பாடமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
இந்தியாவில் பெண்களை பாதிக்கும் நோய்களின் பட்டியலில் மார்பக புற்றுநோய் முதன்மையாக இருக்கிறது. இதை பரிசோதனை செய்து கண்டறியும் முறை மிகவும் எளிதானது. தொடக்க நிலையில் கண்டறியும்போது மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் மூலம் புற்றுநோயில் இருந்து மீண்டு வர முடியும்.
2. துடிப்பு மிக்க துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில்
விலை உயர்ந்த துப்பாக்கி மற்றும் இதர கருவிகளை வாங்க அதிக செலவு ஆகிறது. பயிற்சியின் ஆரம்ப காலங்களில் சிறந்த கருவிகளோ, பயிற்சி பெறுவதற்கு ஏற்ற இடமோ என்னிடம் இல்லை. அந்த சூழ்நிலையில் பயிற்சி பெறுவதே சவாலாக இருந்தது.
3. புற்று நோயில் இருந்து மீட்டெடுத்த மன வலிமை
12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்பதில் மாணவர்களுக்கு பெரும் குழப்பம் இருக்கிறது. அவர்களுக்காக 40 துறைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் இருக்கும் வாய்ப்புகள், கல்லூரிகள் போன்றவற்றைப் பட்டியலிட்டு ஒரு வழிகாட்டியை உருவாக்கி இருக்கிறேன். ‘பெற்றோருக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக, பிள்ளைகளுக்குப் பிடிக்காத துறையில் அவர்களை நுழைக்கக் கூடாது.
4. ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வந்த வாய்ப்பு
சணல், துணிப்பை தயாரிக்கும் அந்தப் பயிற்சியை முடித்த பின்பு, வீட்டில் பழைய துணிகளை எடுத்துத் தைத்துப் பார்த்தேன். பை சிறப்பாகவே வந்திருந்தது. பிறகு பல வண்ணங்களில் பைகளைத் தைத்து, அவற்றை புகைப்படம் எடுத்து என்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் வைத்தேன்.
5. சாதிக்க நினைக்கும் பெண்களுக்கான தலைமைப் பண்புகள்
பிரச்சினையைக் கண்டு விலகி ஓடாமல் அதை நேருக்குநேர் சந்திப்பது தலைமை பண்புக்கு மகுடமாக அமையும். தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.