மற்றவை

ரசாயனம் கலந்த நீரில் இருந்து வீட்டுத்தோட்டத்தை பாதுகாப்பது எப்படி? + "||" + How to protect your home garden from chemically contaminated water?

ரசாயனம் கலந்த நீரில் இருந்து வீட்டுத்தோட்டத்தை பாதுகாப்பது எப்படி?

ரசாயனம் கலந்த நீரில் இருந்து வீட்டுத்தோட்டத்தை பாதுகாப்பது எப்படி?
சமையல் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சரியான முறையில் சுத்திகரிப்பதன் மூலம், அதில் இருக்கும் வேதிப்பொருட்களை நீக்க முடியும். இவ்வாறு சுத்திகரித்த நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
காற்று மாசுபாடு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். அதுபோல மக்கள் தொகையின் பெருக்கத்துக்கு ஏற்ப செயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர்களின் உற்பத்தியை பெருக்கியதன் காரணமாக விளை பொருட்களில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது. 

வீடுகளில் பயன்படுத்தும் நீரில் கூட பெருமளவு வேதிப் பொருட்கள் கலந்து உள்ளது. புகை மற்றும் தீங்கு செய்யும் ரசாயனப் பொருட்கள் காற்றையும், நீரையும் மாசுபடுத்துகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் நஞ்சில்லா காய்களைப் பெறுவதற்கு வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளை காற்று மாசுபடுதல் மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்த நீரில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

வீட்டுத் தோட்டத்தில் துளசி, தூதுவளை, நிலவேம்பு, ஆடாதொடா, புதினா, நொச்சி, வெந்தயம், வல்லாரைக்கீரை, வேம்பு, ஓமவள்ளி போன்ற தாவரங்களை வளர்க்கலாம். இவற்றுக்கு காற்றில் உள்ள நச்சுக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இருந்தால் நிலத்தடி நீர் மாசுபடாமல் தடுக்கலாம். மேலும் சமையல் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சரியான முறையில் சுத்திகரிப்பதன் மூலம், அதில் இருக்கும் வேதிப்பொருட்களை நீக்க முடியும். இவ்வாறு சுத்திகரித்த நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் துணி துவைக்கும் பவுடர், குளியல் சோப்புகள் மற்றும் ஷாம்பு போன்றவற்றுக்குப் பதிலாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நன்மை தரும். 

உதாரணமாக கிருமி நாசினியாக கடுக்காய் ஊறவைத்த தண்ணீர், ஷாம்புக்கு பதிலாக செம்பருத்தி இலை, வெந்தயம், அரப்பு, கற்றாழை போன்றவற்றை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும், நமது உடல் நலனுக்கும் நல்லது.

இயற்கை உரங்களான பசுவின் சாணம், ஆட்டுப் புழுக்கை, பசுந்தாள் உரம், சமையலறையில் பயன்படுத்தும் காய்கறி கழிவுகள் போன்றவற்றை உரமாக போடுவதன் மூலம் இயற்கை முறையில் செடிகள் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும். 

தொடர்புடைய செய்திகள்

1. மாசு இல்லாத சமுதாயம் படைப்போம்
இயற்கையை பாதிக்கும் மாசுக்களை அகற்றவும், கட்டுப்படுத்தவும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தனி மனித ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் ஆகாது. எனவே சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்க வேண்டியது நமது கடமையாகும்.
2. சாதிப்பதற்கு திருமணம் தடை இல்லை - நித்யா
நான் நுண்கலைகளைப் படித்திருப்பதால், கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி 151-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 151 முட்டைகளில் காந்தியின் பொன்மொழிகளை எழுதி இரண்டாவது உலக சாதனையைச் செய்தேன். அதே நாளில், 151 ஐஸ் குச்சிகளில் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி மூன்றாவது உலக சாதனையைப் படைத்தேன்.
3. நடிப்பால் ஈர்க்கும் வெண்பா
மேற்கத்திய நடனம் நன்றாக ஆடுவேன். பரதமும் கற்றிருக்கிறேன். நடனத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
4. பூசணிக்காய் ‘பேசியல்’
பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும்.
5. வாழ்வதே ஜெயிப்பது போலத்தான்!
படிப்பில் தடுமாறிய ஜோதிக்கு இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இசை அவரது மனதில் அமைதியைக் கொண்டு வந்தது. பிடித்த பாடல்கள் இசைக்கப்படும்போது இணைந்து பாட ஆரம்பித்தார். குடும்பத்தினர் ஜோதியின் இசை ஆர்வத்தை அறிந்து 13 வயதில் இசைப்பயிற்சியைத் தொடங்கினர்.