கோலத்தில் கோலாகலம்


கோலத்தில் கோலாகலம்
x
தினத்தந்தி 19 Oct 2021 10:26 AM IST (Updated: 30 Oct 2021 1:56 PM IST)
t-max-icont-min-icon

தினமும் வீட்டை சுத்தம் செய்து, விதவிதமான ரங்கோலி கோலங்களை வரைகிறேன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கோலங்கள் வரைந்தேன். இப்போது பிரமாண்டமான ரங்கோலிக் கோலங்கள் வரைகிறேன்.

பாரம்பரிய பழக்கங்களில் வீட்டு வாசலில், பூஜை அறையில் கோலம் இடுவதும் ஒன்று. இதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும். டிஜிட்டல் யுகத்தில் கோலம் போடும் வழக்கம் சற்றே மறைந்தாலும், இன்னமும் சிலர் அதை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஆயிரக்கணக்கான, விதவிதமான ரங்கோலி கோலங்களை வரைந்து, பல போட்டிகளில் பரிசு பெற்று அனைவரது பாராட்டையும் பெற்ற தீபிகாவைச் சந்தித்தோம். அவர் கூறியதாவது..

“மதுரையைச் சேர்ந்த நான், தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். முதலில் பொழுதுபோக்காக ரங்கோலி வரைய ஆரம்பித்தேன். அவ்வாறு வரைந்த கோலங்களை என் தோழிகள் மற்றும் உறவினர்
களுக்கு அனுப்பி வைப்பேன். அவர்கள் எல்லோரும் அதை ரசித்துப் பாராட்டினார்கள்.

அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து பல ரங்கோலி கோலங்களை வரைந்தேன். ரங்கோலி கோலப் போட்டிகளில் பங்கேற்று ‘கோலக்கலையரசி’  போன்ற பட்டங்கள், பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளேன். இப்போது ரங்கோலி கோலங்கள் வரைவதை எனது முழு நேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறேன்.

தினமும் வீட்டை சுத்தம் செய்து, விதவிதமான ரங்கோலி கோலங்களை வரைகிறேன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கோலங்கள் வரைந்தேன். இப்போது பிரமாண்டமான ரங்கோலிக் கோலங்கள் வரைகிறேன்.
வீட்டு பூஜை அறையில் சிறப்பு அலங்காரம் செய்துவிட்டு, ரங்கோலி கோலங்களை தெய்வீகப் பாடல்களைப் பாடியபடி வரைவேன்.

“மார்கழி மாதங்களில் ஆண்டாள் கோலம் வரைவேன். ‘3 டி' கோலங்களும் வரைகிறேன்.  ஆன்லைனில் நடத்தப்படும் கோலப்போட்டிகளில் பங்கேற்றுப் பாராட்டும், பரிசுகளும் பெற்றுள்ளேன். பள்ளியில் படிக்கும் காலம் முதலே ரங்கோலி கோலங்கள் வரையத் தொடங்கிவிட்டேன்.

திருமணங்கள், திருமண வரவேற்பு, பிறந்தநாள்  விழாக்களில் ரங்கோலி வரைவதற்கு என்னை அழைப்பார்கள். ஆர்வத்துடன் சென்று வரைவேன்.  ரங்கோலி கோலங்களில் அனைத்து உருவங்களையும் என்னால் வரைய முடியும். ரங்கோலி வரைவதற்காக எந்தவித கருவியும் பயன்படுத்துவது இல்லை. கைகளாலேயே வரைந்து விடுவேன்.

கோலங்களை வரைவதற்கு, நான்கு மணி நேரம் முதல் பதினைந்து மணி நேரம் வரையிலும் ஆகும்” இவ்வாறு அவர் கூறினார். 

Next Story