மற்றவை

கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் + "||" + christmas decortions

கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள்

கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள்
கிறிஸ்துமஸ் விளக்குகள் மற்றும் பரிசு பைகள் தயாரிக்கும் விதம் குறித்து பார்ப்போம்.
லகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் விழாக்களில், கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்று. 

கிறிஸ்துமஸ் என்றாலே ஒளிரும் வண்ண விளக்குகளும், பரிசுகளும்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், வீட்டிலேயே செய்யக்கூடிய விளக்குகள் மற்றும் பரிசு பைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

உறைபனி மெழுகுவர்த்தி ஹோல்டர்

தேவையானவை
பிஷ் பவுல் - 1
டீ லைட் மெழுகுவர்த்தி - 1
உப்பு - தேவையான அளவு
சணல் கயிறு - தேவையான அளவு
செயற்கை இலை, செர்ரி பழங்கள் - தேவையான அளவு
நிறமற்ற பசை - 1

செய்முறை:
  • பிஷ் பவுலின் மேற்பகுதி முழுவதும் நிறமற்ற பசையைத் தடவவும்.

  • இப்போது உப்பை எடுத்து, பசை தடவிய பவுலின் மேற்பகுதி முழுவதும் அடர்த்தியாக படியும்படித் தூவவும்.

  • உப்பு மேல் பகுதியில் படிந்து காய்ந்ததும் பவுலின் கழுத்துப்பகுதியில் சணல் கயிறைச் சுற்றி ஒட்டவும்.

  • அதன் மேல் செயற்கை இலைகள் மற்றும் செர்ரி பழங்களை ஒட்டவும்.

  • இப்போது பவுலின் உள்ளே டீ லைட் மெழுகுவர்த்தியை ஒளிரச் செய்தால், பனி படர்ந்த, அழகான மெழுகுவர்த்தி ஹோல்டர் தயார்.

விதவிதமான குக்கீஸ் கிப்ட் பேக்
  1.  10x10 சென்டிமீட்டர் அளவுள்ள தாளை பாதியாக மடித்து, ஏதேனும் இரண்டு பக்கங்களில் பசை தடவி ஒட்டவும். இப்போது அதன் உட்பகுதியில் குக்கீஸ் வைத்து, மேல் பகுதியை இரண்டு முறை மடித்து, படத்தில் உள்ளவாறு டூத்பிக்கை அதில் பொருத்தவும்.

  2. 14x7 அங்குல அளவுள்ள தாளை எடுத்துக்கொள்ளவும். அதை அகலவாக்கில் பாதியாக மடித்து, பக்கவாட்டின் இரு புறத்திலும் பசை தடவி ஒட்டவும். தாளின் திறந்த பகுதியின் பக்கவாட்டில் உள்ள பகுதியை, உட்புறமாக சிறிய முக்கோண வடிவில் மடிக்கவும். குக்கீஸ் அல்லது கேக்கை அதன் உட்பகுதியில் வைத்த பிறகு, திறந்திருக்கும் பகுதியை படத்தில் காட்டியவாறு சேர்த்து ஒட்டவும்.

  3. 8x8 சென்டிமீட்டர் அளவுள்ள சதுரவடிவ தாளை எடுத்துக்கொள்ளவும். அதன் மையத்தில் குக்கீஸ் வைத்து, நான்கு முனைகளையும், தாளின் மையப்புள்ளியைத் தொடும்படி முக்கோண வடிவில் மடிக்க வேண்டும். இறுதியில் தாளின் மீது நிறமற்ற டேப் போட்டு ஒட்டவும்.

  4. பேப்பர் தட்டை படத்தில் காட்டியுள்ளபடி, முதலில் நடுப்பகுதியின் இருபுறமும் சிறிய அளவில் வெட்டவும். பின், படத்தில் குறிப்பிட்டுள்ளபடி மடித்து ஒட்டவும். இப்போது சிறிய திகைப்புடன் கூடிய பை கிடைக்கும். அதில் குக்கீஸ் அல்லது கேக் வைத்து பரிமாறலாம்.

  5. 12x12 அங்குலமுள்ள சதுர வடிவ தாளின், நான்கு புறமும் நேர்கோடாகவும், கிடைமட்டமாகவும் 4 அங்குல அளவு குறித்து, வெட்டிக்கொள்ளவும். இப்போது பிளஸ் வடிவிலான தாள் கிடைக்கும். அதன் மையத்தில் குக்கீஸ் வைத்து, பக்கவாட்டில் உள்ள இரண்டு பகுதிகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கவும். பின்னர், கீழ் மற்றும் மேல் புறத்தில் உள்ள பகுதிகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து சுற்றினால் குக்கீஸ் பாக்ஸ் தயார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
2. சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
4. சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’
இந்த பேஷியல் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். முகம் பொலிவும் பெறும்.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.