மல்லிப் பொங்கல்
பொங்கல் பண்டிகையொட்டி வீட்டில் எளிமையான முறையில் மல்லிப்பொங்கல், பால் பொங்கல் தயார் செய்வது குறித்து பார்ப்போம்.
மல்லிப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 250 கிராம்
பாசி பருப்பு - 150 கிராம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
பெருங்காயம் - ½ தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 4 கைப்பிடி
நெய் - 6 தேக்கரண்டி
முந்திரி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
அடி கனமான பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் ஊற்றவும். நன்றாகக் கழுவிய பச்சரிசி, பாசி பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், 3 தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து குழைவாக வேக வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.
பின்னர் அதை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பொங்கலுடன் கொத்தமல்லி விழுதை சேர்த்துக் கிளறவும்.
பின்னர் மீதமுள்ள நெய்யில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, நெய்யுடன் பொங்கலில் ஊற்றிக் கிளறவும். இப்பொழுது சுவையான மல்லிப் பொங்கல் தயார்.
இதனை சாம்பாருடன் சேர்த்துப் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
பால் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 250 கிராம்
நெய் - 7 தேக்கரண்டி
பால் - 1 லிட்டர்
முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப
சர்க்கரை அல்லது வெல்லம் - தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பச்சரிசியுடன் பால் மற்றும் 4 தேக்கரண்டி நெய் சேர்த்துக் குழைவாக வேகவைக்கவும். பின்னர் அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கிளறவும்.
மற்றொரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து நெய்யோடு பொங்கலில் ஊற்றிக் கலக்கவும்.
இப்பொழுது சுவையான மற்றும் சுலபமான பால் பொங்கல் தயார்.
Related Tags :
Next Story