ஆரோக்கியம் அழகு

கொசுக்களும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் + "||" + mosquito disease and awareness

கொசுக்களும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும்

கொசுக்களும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும்
பெண் கொசுக்கள் சராசரியாக 100 முட்டைகளை ஒரே நேரத்தில் இடும். மனிதர்கள் மற்றும் விலங்குகள் பயன்படுத்துகின்ற நீர்நிலைகள், கொட்டாங்குச்சி, தண்ணீர் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக் பொருட்கள் முதலியவற்றில் தேங்கும் மழைநீரிலும் கொசுக்கள் முட்டை இடும்.
ழைக்காலம் பல இனிய தருணங்களை தந்தாலும், நோய்கள் பரவும் வாய்ப்பும் அதில் சேர்ந்தே வருகிறது. பருவ மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் மட்டுமே அதிகமான நோய்கள் பரவுகின்றன.

கொசுக்களின் தோற்றம் 

இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொசுக்கள், முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. தற்போது உலகில் 2700 வகையான கொசுக்கள் உள்ளன.

இவை நீர்நிலைகள் உள்ள இடங்களில் அதிகமாக உருவாகும். பெண் கொசுக்கள் சராசரியாக 100 முட்டைகளை ஒரே நேரத்தில் இடும். மனிதர்கள் மற்றும் விலங்குகள் பயன்படுத்துகின்ற நீர்நிலைகள், கொட்டாங்குச்சி, தண்ணீர் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக் பொருட்கள் முதலியவற்றில் தேங்கும் மழைநீரிலும் கொசுக்கள் முட்டை இடும்.

கொசுக்களால் ஏற்படும் நோய்கள்:

கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா மற்றும் யானைக்கால் போன்ற பல  நோய்கள் பரவுகின்றன. உலகம் முழுவதும் மூன்று வகையான கொசுக்களே அதிக அளவிலான நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா மற்றும் யானைக்கால் நோயை பரப்பும் அனாபிலஸ் கொசு, டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ் கொசு மற்றும்  மூளைக் காய்ச்சலை பரப்பும்  கியூப்லெக்ஸ் கொசு. பெரும்பாலும் பெண் கொசுக்களே நோய்களைப் பரப்புகின்றன.

கொசுக்களை எவ்வாறு விரட்டலாம்?

கொசுக்களை விரட்டுவதற்கு ரசாயனங்கள் கலந்த கொசு விரட்டிக்கு மாற்றாக சில செடி வகைகளை பயன்படுத்தலாம். இவற்றின் நறுமணம் கொசுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். புதினா, துளசி, ரோஸ்மேரி, ஊதாச் செடி, சாமந்தி, பூண்டுச்செடி, கிராம்பு போன்ற செடிகளை வீட்டின் முற்றத்தில் மட்டுமின்றி, ஜன்னல் ஓரத்திலும் வளர்க்கலாம்.

மேலும் மாலை நேரங்களில் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் கற்பூரம் ஏற்றி வைப்பதன் மூலம் கொசுக்கள், பூச்சிகள் போன்றவை உள்ளே நுழைவதைத் தடுக்கலாம். 

சுற்றுப்புறத் தூய்மை அவசியம் 

வீட்டைச் சுற்றி குப்பைகளையும், இதர பிளாஸ்டிக் கழிவுகளையும் சீராக அகற்றி, தூய்மையாக வைத்திருந்தால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும். இதன் மூலம் நோய்கள் பாதிப்பு இல்லாமல், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. மலைவாழ் மக்களிடையே மாற்றம் ஏற்படுத்திய மகாலட்சுமி
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், ஸ்மார்ட்போன் வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
2. அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!
முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
3. பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.
4. உலக நீரிழிவு நோய் தினம்
நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
5. அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’
உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்