ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு...
உடல் எடை அதிகரிப்பில், தேங்காய் சார்ந்த உணவுகளுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய்ப்பால் பருகுவது, உடல் எடை சீராக அதிகரிப்பதற்கு உதவும். மேலும் இதன் மூலம் சருமம் பளபளக்கும்.
ஒவ்வொருவரும் தங்கள் உயரத்துக்கு ஏற்ற, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியமானது. அதிகமான உடல் எடையைக் குறைப்பதைப் போலவே, எடை குறைவாக இருப்பவர்கள் தங்களது சராசரி எடையை அடைவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் எடையை அதிகரிப்பதற்காக, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் மருந்துகள் உட்கொள்வதும், முறையற்ற உடற்பயிற்சி செய்வதும் உடல்நலனை பாதிக்கும். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிப்பில், தேங்காய் சார்ந்த உணவுகளுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய்ப்பால் பருகுவது, உடல் எடை சீராக அதிகரிப்பதற்கு உதவும். மேலும் இதன் மூலம் சருமம் பளபளக்கும்.
பசும்பால், தயிர், நெய் போன்ற உணவுப் பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலை உணவுக்கு முன்பு ஒரு டீ ஸ்பூன் பசு நெய் சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.
தினமும் காலை உணவு இடைவேளையில் செவ்வாழை சாப்பிடுவது ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்பிற்கு உதவும். அது பசியைக் கட்டுப்படுத்து வதோடு, நொறுக்குத்தீனி சாப்பிடுவதையும் தடுக்கும். வாழைப்பழம் ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு உதவும் என்பதால், குழந்தைகளுக்கு அதைக் கொண்டு பலவிதமான உணவுகள் தயாரித்துக் கொடுக்கலாம்.
காலை உணவுக்கு முன்பு ஊற வைத்த பாதாம் சாப்பிடலாம். உடல் எடை அதிகரிப்பதற்கு எள் சிறந்த உணவாக இருக்கும். எள் உருண்டை, எள் சட்னி, எள் பொடி, எள் தோசை போன்ற உணவுகள் ருசியாக இருப்பது மட்டுமில்லாமல், உடல் எடை அதிகரிப்பதற்கும் உதவும்.
முடிந்தவரை வெள்ளை அரிசியைத் தவிர்த்து கம்பு, ராகி போன்ற கூழ் வகை உணவுகளைச் சாப்பிடலாம்.
இவை அனைத்தையும் விட மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைக் கேட்பது முக்கியமானதாகும். உங்களது உடல் அமைப்பு, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள், வாழ்க்கை முறை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, அவர்கள் பரிந்துரைக்கும் வழிகளை பின்பற்றி உடல் எடையை அதிகரிக்கலாம்.
உடல் எடையைக் குறைப்பது போலவே, எடை அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி செய்வது உதவும். பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி முறையாக உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தையும், எடையையும் அதிகரிக்கும்.
Related Tags :
Next Story