மாவட்ட செய்திகள்

விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை மந்தம் காரணமாக காய்கறி விலை சற்று குறைந்துள்ளது.

பதிவு: நவம்பர் 19, 04:45 AM

சென்னை ரெயில் நிலையங்களில் நாய் தொல்லையால் பயணிகள் பீதி

சென்னை ரெயில் நிலையங்களில் நாய்கள் தொல்லை அதிகரிப்பதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். ரெயில் நிலையத்தில் நாய்கள் சுற்றித்திரிவதை தடுக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 19, 04:30 AM

லோடு வேன்-கன்டெய்னர் லாரி மோதல்; டிரைவர் பலி 3 பேர் படுகாயம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற லோடு வேன் மீது கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் வேன் டிரைவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: நவம்பர் 19, 04:15 AM

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே பழுதான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: நவம்பர் 19, 04:00 AM

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த கடலூர் வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். உறவினரிடம் நகையை வாங்கி வைத்துக்கொண்டு தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பதிவு: நவம்பர் 18, 04:30 AM

காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பதிவு: நவம்பர் 18, 04:15 AM

பாரத் உயர்கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் அஞ்சலகங்களில் விற்பனை

பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் அஞ்சலகங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ரூ.20 கோடி கல்வி உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 18, 04:15 AM

சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா 5 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையாளர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பல்லாவரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: நவம்பர் 18, 03:45 AM

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது - வருவாய் நிர்வாக கமிஷனர் வேண்டுகோள்

கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்கள் கொட்டக்கூடாது என வருவாய் நிர்வாக ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: நவம்பர் 17, 04:30 AM

பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பாதையில் மணலை கொட்டியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மணல் கொட்டியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பதிவு: நவம்பர் 17, 04:15 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/21/2019 8:09:59 PM

http://www.dailythanthi.com/Districts/Chennai/2