மாவட்ட செய்திகள்

தாம்பரத்தில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் 100–க்கும் மேற்பட்டோர் கைது + "||" + Bank siege Struggle Arrested

தாம்பரத்தில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் 100–க்கும் மேற்பட்டோர் கைது

தாம்பரத்தில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் 100–க்கும் மேற்பட்டோர் கைது
தாம்பரத்தில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். முற்றுகை போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் மிக

தாம்பரத்தில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். அறிவிப்பு வெளியாகி 50 நாட்களுக்கு மேலாகியும் பணத்தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை.

இதனை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி சார்பாக 100–க்கும் மேற்பட்டோர் நேற்று தாம்பரம் காமராஜ் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி வங்கியின் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கத்திக்குத்து

* வார்தா புயலால் மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில், சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடங்கி உள்ளது.

* அம்பத்தூரில் பணத்தகராறில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் முகமது பஷீர் (42) என்பவரை, நேற்று கத்தியால் குத்தியதாக சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விஜய் ஆனந்த் (39) கைது செய்யப்பட்டார்.

* நீலாங்கரை அருகே அக்கரை பகுதியைச் சேர்ந்த ‘ஷூ’ கடை மேலாளர் மணிகண்டன் (வயது 27) என்பவரை மர்மநபர் காரில் கடத்திச்சென்றதாக ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்தபோது, மணிகண்டன் நண்பருடன் புதுச்சேரிக்கு சென்று இருப்பது தெரியவந்தது.

* கிண்டி அம்பேத்கர் நகரில் சொத்து தகராறில் பழனி (63) என்பவரை கத்தியால் குத்திய அவரது அண்ணன் சந்திரன் (65) கைது செய்யப்பட்டார்.

கஞ்சா பறிமுதல்

* ஆதம்பாக்கத்தில் குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட செல்வகுமாரை (35) கத்தியால் குத்திய பிரேம்குமார் (36) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

* பேசின்பிரிட்ஜ் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மதியழகன் (46), அவரது மனைவி மகேஸ்வரி (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* மெரினா டி.ஜி.பி. அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

* சிந்தாதிரிப்பேட்டையில் குடும்பத்தகராறில் சாமுவேல் (23) என்பவரை கத்தியால் குத்திய அவரது அண்ணன் மோசஸ் (27) கைது செய்யப்பட்டார்.

சாலை மறியல்

* எழும்பூர் – சேத்துப்பட்டு இடையே தண்டவாளத்தை கடந்து சென்றபோது ஆந்திராவைச் சேர்ந்த வேணுகோபால் யாதவ் (48) மின்சார ரெயில் மோதி படுகாயம் அடைந்தார். இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

* விருகம்பாக்கத்தில் கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்த லோகேஸ் (20) நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

* வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

* வியாசர்பாடியில் மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நேற்று வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.