மாவட்ட செய்திகள்

மோனலிசாவின் கண்களில் உள்ள மர்மம்! + "||" + Monalisa In the eyes of the mystery

மோனலிசாவின் கண்களில் உள்ள மர்மம்!

மோனலிசாவின் கண்களில் உள்ள மர்மம்!
உலகின் புகழ்பெற்ற ஓவியங் களில் ஒன்று, லியோனார்டோ டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியம்.
மோனலிசாவின் புன்னகை யுடன், அதை வரைந்த லியோனார்டோ டாவின்சியும் ஒரு மர்மம் நிறைந்த மனிதராக கருதப்படுகிறார்.
காரணம், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோனலிசா ஓவியம், மர்மங்களால் சூழப்பட்டுள்ளது. அப்படி அந்த ஓவியத்தில் என்ன மர்மங்கள் இருக்கின்றன?
இத்தாலியில் உள்ள கலாசார பாரம்பரியத்துக்கான தேசியக் குழுவினர் மோனலிசா ஓவியத்தின் கண்களைப் பெரிதுபடுத்திப் பார்த்தபோது, அதில் எழுத்துக்களும், எண்களும் இருப்பதை அறிந்துள்ளனர்.

அந்த எழுத்துகள் எல்வி (LV) என்றும், வேறு சிலருக்கு சிஇ (CE) அல்லது பி (B) என்றும் தோற்றமளிக்கின்றன. அதோடு, 72 என்ற எண்ணைப் போன்று தோற்றமளிக்கும் குறியீடுகளும் தெரிகின்றன. எல்வி என்பது ஓவியத்தை வரைந்தவரின் கையெழுத்தைக் குறித்தாலும் (LV = Leonardo da Vinci), மீதி இருக்கும் குறியீடுகளின் அர்த்தம் என்ன என்று அறிய கலாசார பாரம்பரியக் குழுவினர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி மர்மமான முறையில் டாவின்சி என்ன செய்தி கூற விரும்பினார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்!

அதிகம் வாசிக்கப்பட்டவை