மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல் + "||" + Thipparankundam Taluk office Need to open soon Public emphasis

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
2 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை விரைவில் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருநகர் 8–வது பஸ் நிறுத்ததில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இடநெருக்கடியில் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனக்கன்குளம் செல்லும் பாதையில் உச்சிக் கருப்பணசாமி கோவில் அருகே மொட்டமலையில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 6 ஆயிரத்து 340 சதுரஅடி பரப்பளவில் ரூ. 2கோடியே 20 லட்சத்தில் கீழ் மற்றும் மேல் தளத்துடன் கூடிய புதிய தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அலுவலகத்தில் இ.சேவை மையம், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையம் மற்றும் குடிமைபொருள் பிரிவு, தேர்தல் தனிபிரிவு ஆகியவை செயல்படும். இதனால் ஓரே இடத்தில் தேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுவார்கள். ஆகவே புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டு பயன்பாட்டு வரும் நாளை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் விரைவில் தாலுகா அலுவலம் திறக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தி உள்ளனர்.

விரையமாகும் வாடகை

இந்த புதிய கட்டிடம் திறக்கப்பட்டால், மாதம் தோறும் தற்போது செயல்பாட்டில் உள்ள தாலுகா கட்டிடத்திற்கு வாடகையாக வீரையமாகும் ரூ.25ஆயிரம் அரசுக்கு மிச்சமாகும். புதியதாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு 2 மாதமாகியும் என்ன காரணத்திற்காக திறக்கப்படவில்லை என்று தெரியாத நிலை உள்ளது. இதுகுறித்து வருவாய்துறையினர் கூறும் போது, விரைவில் புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டு செயல்படும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...