மாவட்ட செய்திகள்

அசோக் நகரில்அன்பு பாலம் புதிய அலுவலகம் திறப்பு + "||" + In Ashok Nagar Anbu Palam New office opening

அசோக் நகரில்அன்பு பாலம் புதிய அலுவலகம் திறப்பு

அசோக் நகரில்அன்பு பாலம் புதிய அலுவலகம் திறப்பு
சந்தோஷ் என்பவர் அசோக்நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை அன்பு பாலத்திற்கு வழங்கியுள்ளார். தற்போது அன்புபாலம் நிறுவனம் இந்த இடத்தில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது.
சென்னை, 

அன்புபாலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அன்பு பாலம் நிறுவனத்தின் அலுவலகம் அடையாறில் இயங்கி வந்தது. அண்ணாநகரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் அசோக்நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை அன்பு பாலத்திற்கு வழங்கியுள்ளார். தற்போது அன்புபாலம் நிறுவனம் இந்த இடத்தில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது.

புதிய அலுவலக கட்டிடத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அன்பு பாலம் நிறுவனர் பாலம் கல்யாணசுந்தரம், நல்லம்மை ராமநாதன், கவிஞர் விஜய் ஆனந்த், சந்தோஷ், அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி, மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.