மாவட்ட செய்திகள்

சேலத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு + "||" + In Salem ADMK, DMK Attire for Anna's statue

சேலத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

சேலத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரான பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் நேற்று சேலத்தில் பல்வேறு கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.
சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி, சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு இருந்து மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில், பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், நடேசன், ஆர்.ஆர்.சேகரன் ஆகியோர் முன்னிலையில் அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநகர் மாவட்ட துணை செயலாளர் பாலு, பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, இணை செயலாளர் ராம்ராஜ், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் சென்னகிருஷ்ணன், சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், அழகாபுரம் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் பெரியபுதூர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மதியம் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அண்ணா நினைவு தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை பன்னீர் செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் வரதராஜன், உதவி ஆணையாளர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர் மாலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த பொதுவிருந்து நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மதிய உணவு சாப்பிட்டனர்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் சேலம் பெரியார் சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை நோக்கி மவுன ஊர்வலம் புறப்பட்டு சென்றனர். ஊர்வலம் அண்ணா சிலையை அடைந்ததும், சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, மாநகர செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் நாசர்கான் என்ற அமான், தாமரைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபால்ராஜ், அமைப்பு செயலாளர் வந்தியதேவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாணவர் அணி நிர்வாகி டாக்டர் சசிகுமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜி.ஆர். தந்த இயக்கம் ‘‘அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது" அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
‘‘எம்.ஜி.ஆர்.தந்த இயக்கமான அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினா
2. அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.
3. திசையன்விளையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு
திசையன்விளையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.
4. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும்
சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
5. மாவட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
சேலம் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் அ.தி.மு.க.- தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.