மாவட்ட செய்திகள்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார் + "||" + The Vice President of the Commission for National Adhidravidam review the affected areas

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு செய்தார். போலீசார் மீது கிராம மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வன்னியம்மாள். இவர், கடந்த 23-ந்தேதி இறந்து விட்டார். அவருடைய உடலை தகனம் செய்வதற்காக, மாற்றுப்பாதை வழியாக எடுத்து சென்றனர். அப்போது, இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் எதிரொலியாக, கடந்த 5-ந்தேதி கலவரம் வெடித்தது. இருதரப்பினரும் நேருக்குநேர் மோதினர். இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டன. 10 கடைகள் சூறையாடப்பட்டன. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் இருதரப்பையும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை, தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்திரா காலனியை சேர்ந்த மக்களிடம் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள், போலீசார் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.

வன்னியம்மாள் உடலை எடுத்து சென்றபோது ஏற்பட்ட மோதலில் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், போலீசாரின் அலட்சியம் தான் கலவரம் ஏற்பட்டதற்கு காரணம் என்றும், அவர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். தங்களது பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர் உடனடியாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேதம் அடைந்த வீடுகள், கடைகளுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

அதன்பின்னர் அவர், கலவரத்தில் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆய்வின்போது கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.