மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம் + "||" + Cotton auction for Rs 25 lakh in Namakkal

நாமக்கல்லில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 2 ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது.
நாமக்கல்,

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 2 ஆயிரம் மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

இந்த பருத்தி மூட்டைகள் சுமார் ரூ.25 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 765 முதல் ரூ.5 ஆயிரத்து 639 வரை ஏலம் போனது. டி.சி.எச். மற்றும் சுரபி ரக பருத்தி மூட்டைகள் நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த பருத்தி மூட்டைகளை கோவை, அவினாசி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பருத்தி வாங்கி ரூ.3¼ கோடி மோசடி: தொழில் அதிபரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
பருத்தி வாங்கி ரூ.3¼ கோடி மோசடி செய்த வழக்கில் தொழில் அதிபரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
2. முதலீடுகளை திரும்ப வழங்காத தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் சொத்துக்கள் ஏலம்
அழகியமண்டபத்தில் முதலீடுகளை திரும்ப வழங்காத தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் சொத்துக்கள் ஏலம் வருகிற 15–ந் தேதி நடக்கிறது.
3. நாமகிரிப்பேட்டையில்: ரூ.12 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் 252 மூட்டைகள் மஞ்சள் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் போனது.