மாவட்ட செய்திகள்

ஆட்டோ தொழிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க கூடாது, சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் + "||" + The multinational corporations do not occupy the auto industry

ஆட்டோ தொழிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க கூடாது, சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஆட்டோ தொழிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க கூடாது, சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஆட்டோ தொழிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என்று கோவையில் நடந்த சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,

தமிழ்நாடு சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில மாநாடு நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர் திருமண மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடகோவை சிந்தாமணி முன்புறம் இருந்து நேற்று மாலை தொடங்கிய ஊர்வலத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வடகோவையில் தொடங்கிய ஊர்வலம் பூமார்க்கெட், தியாகி குமரன் வீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜவீதி தேர்நிலைத்திடலில் முடிவடைந்தது. அங்கு இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

கூட்டத்தில் ஆட்டோ சம்மேளன தலைவர் எம். சந்திரன், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி, பொருளாளர் ஏ.பழனி, துணை பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும். பொதுபோக்குவரத்தை சீர்குலைத்து பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செய்வதற்கு ஏதுவாக மோட்டார் வாகன சட்ட திருத்தம் மேற்கொள்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவையில் நேற்றுமாலை பலத்த மழை பெய்தது. அந்த கொட்டும் மழையிலும் ஊர்வலத்தில் தொழிற்சங்கத்தினர் கொடிகளை ஏந்தி கோஷம் எழுப்பியபடி ஏராளமானவர்கள் நடந்து சென்றனர். மாநாடு இன்றும்(சனிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.