மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Hindu Frontiers demonstrated in Namakkal

நாமக்கல்லில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியில் ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் வீடு மற்றும் வாகனங்களை இழந்த நபர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் ராஜ்கமல் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் அரப்புளி, பாலகிருஷ்ணன், இளமுருகன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கலவரத்தை அடக்காத அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோ‌ஷங்கள் எழுப்பினர்.


தொடர்புடைய செய்திகள்

1. சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. தஞ்சை அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தல்
பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தஞ்சை அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3. தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை
இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. பா.ம.க. பிரமுகர் படுகொலை, நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் படுகொலையை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.