மாவட்ட செய்திகள்

வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது + "||" + Exotic state dresses are adulterous 3 people arrested

வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது

வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது
வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் பாலா. இவர் அண்ணாநகர் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இதில், மாடக்குளத்தை சேர்ந்த அழகேஸ்வரன்(வயது 32), அவருடைய மனைவி பவித்ரா (25), கேரளாவை சேர்ந்த சனூப்(23) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக அண்ணாநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அதில் மஜாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வருவது குறித்து தகவல் அறிந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் பாலா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விபசாரம் செய்ய உதவியாக இருந்த அழகேஸ்வரன், பவித்ரா, சனூப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்திற்கு அழைத்து வந்த 3 அழகிகளையும் மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, வெளிமாநிலங்களை சேர்ந்த அழகிகளிடம் அதிக பணம் தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரம் செய்கின்றனர். தற்போது மீட்கப்பட்ட 3 அழகிகளும் கொல்கத்தா, கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்த மசாஜ் சென்டரில் இருந்து, பணம் எடுக்க பயன்படுத்தும் ஸ்வைப் மிஷின், ரூ.5 ஆயிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். இதில் ஏ.டி.எம். கார்டு வைத்துள்ளவர்களிடம் விபசாரத்திற்காக பணம் பெறுவதற்கு வசதியாக ஸ்வைப் மிஷினை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளர் பாலாவை தேடி வருகிறோம் என்றனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை