மாவட்ட செய்திகள்

ஊட்டி ரோஜா கண்காட்சி நிறைவு: 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர் + "||" + Ooty Rose Exhibition completed

ஊட்டி ரோஜா கண்காட்சி நிறைவு: 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

ஊட்டி ரோஜா கண்காட்சி நிறைவு: 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
ஊட்டியில் 2 நாட்கள் நடைபெற்ற ரோஜா மலர் கண்காட்சியை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

ஊட்டி,

கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று முன்தினம் 16–வது ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 25 ஆயிரம் ரோஜா மலர்களால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்த இந்தியா கேட் (இந்திய நுழைவு வாயில்) சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை சார்பில், ஜல்லிக்கட்டு காளை, மயில், கப்பல், ரோஜா இதழ்களால் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி ரோஜா அல்வா, கல்யாண மாலை போன்றவை இடம் பெற்று இருந்தது.

ரோஜா கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கண்காட்சியை ரசிக்க பூங்காவின் நுழைவுவாயில் பகுதியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரோஜா கண்காட்சியை நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 820 பேரும், நேற்று 20 ஆயிரத்து 300 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 120 சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர்.

ரோஜா கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் சிறந்த அரங்குகள், ரோஜா பூக்கள் மற்றும் பூங்காக்களுக்கான கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சிறந்த தனியார் ரோஜா பூங்காக்கள், அரங்குகள், ரோஜா பூக்களுக்கான கோப்பைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–

மலைகளின் அரசிக்கு மகுடம் சூட்டும் வகையில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நூற்றாண்டு மலர் கண்காட்சியை பெருமைப்படுத்தும் வண்ணம் கடந்த 1995–ம் ஆண்டு அமைக்கப்பட்ட ரோஜா பூங்கா தற்போது உலக பிரசித்தி பெற்ற பூங்காவாக திகழ்கிறது. ஜப்பான் நாட்டில் உள்ள உலக ரோஜா சம்மேளனம் கடந்த 2006–ம் ஆண்டு உலகின் தலைசிறந்த பூங்கா என்ற விருதை வழங்கியது. கடந்த 2017–2018–ம் ஆண்டில் ரோஜா பூங்காவுக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர். பல வண்ணங்களில் ஜொலிக்கும் ரோஜாக்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அனைவரையும் ரசிக்க வைக்கும் இடம்.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவை கண்டு ரசிக்காமல் செல்வது இல்லை. ரோஜா பூக்கள் பல மருத்துவ குணங்களை கொண்டு விளங்குகிறது. இதில் வைட்டமின் ‘சி’ உள்ளது. ரோஜா இதழ்களை கொண்டு தயாரிக்கப்படும் குல்கண்ட், சந்தைகளில் தனி இடம் உண்டு. இதனை உட்கொள்வதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கிறது. ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் ‘ரோஸ் வாட்டர்’ மன இறுக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு அசத்திய சுற்றுலா பயணிகள்
இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு சுற்றுலா பயணிகள் அசத்தினர்.
2. ‘வாழ்க்கைக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தது தமிழ்மொழி மட்டும் தான்’ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு
திருப்பூர் புத்தக கண்காட்சி விழாவில் கலந்து கொண்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வாழ்க்கைக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தது தமிழ்மொழி மட்டும் தான் என்று கூறினார்.
3. கோவையில் ஓட்டலில் நடந்த கண்காட்சியில் 24 பவுன் நகை திருட்டு
கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கண்காட்சியில் 24 பவுன் நகை திருடிய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. தபால் தலை கண்காட்சி: மாணவர்கள் பேனா நட்பை தொடங்க வேண்டும் கோபால் கிருஷ்ண காந்தி அறிவுரை
மாணவர்கள் பேனா நட்பை தொடங்க வேண்டும் என்று கோபால் கிருஷ்ண காந்தி கூறினார்.
5. கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...