மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு + "||" + 5½ pound gold chain flush to a woman who traveled to Kanyakumari

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், தற்போது கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்தி நகை திருடும் கும்பல் ஊடுருவி கைவரிசை காட்டி வருகிறார்கள்.

நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 60 பேர் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க தனியார் பஸ்சில் வந்தனர். அதிகாலை 3 மணிக்கே அவர்கள் வந்து விட்டதால் கடற்கரை சாலையில் பஸ்சை ஒதுக்கி அதில் இருந்தவர்கள் ஆங்காங்கே படுத்து தூங்கினர்.

தங்க சங்கிலி பறிப்பு

அவர்களுடன் சசிகுமார் மனைவி கிருத்திகா (வயது 27) என்பவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்து கிருத்திகா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

நகை பறிக்கப்பட்டதை உணர்ந்த கிருத்திகா, சத்தம் போட்டு அலறினார். அவருடன் வந்தவர்கள் நகை பறித்து ஓடிய வாலிபரை துரத்தி சென்றனர். அதற்குள் அந்த வாலிபர் ஓடி தலைமறைவானார்.

இதுகுறித்து கிருத்திகா கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நகை பறித்து சென்ற நபரை தேடி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரியில் கணவன் கண் முன்பு துணிகரம்: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு
கிருஷ்ணகிரியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் அவரது கணவன் கண் முன்பே கத்தியை காட்டி நகையை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. மூதாட்டியிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை
அகஸ்தீஸ்வரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து, மூதாட்டியிடம் 1½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
4. தஞ்சையில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு
தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.