மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் + "||" + The school teacher was stabbed to death by the relatives claiming that the suicide death was mystery

பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
உடையார்பாளையம் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பாளையம்பாடி அரண்மனைகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49). விவசாயி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் செந்தமிழ்செல்வி (25) மணகெதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும், பள்ளி விடுதியில் காப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை செந்தமிழ்செல்வியிடம், அவரது தந்தை செல்போனில் பேசி உள்ளார். அப்போது உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாக செந்தமிழ்செல்வியிடம் கூறினார். அதற்கு தனக்கு தற்போது திருமணம் வேண்டாம், தம்பி, தங்கைகள் படிப்பு முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேகர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சாலை மறியல்

இந்நிலையில் செந்தமிழ்செல்வி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு செந்தமிழ்செல்வி சாவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. விஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
விஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் மறியல் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை அமைதிப்படுத்தினர்.
4. உரசியதில் குழந்தைகளுடன் வாய்க்காலில் விழுந்த தொழிலாளி தனியார் பஸ்சை வழிமறித்து பொதுமக்கள் மறியல்
தனியார் பஸ் உரசியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தனது 2 குழந்தைகளுடன் வாய்க்காலில் விழுந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த பஸ்சை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர்.
5. பஸ் வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
மணப்பாறையில் பஸ் வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.