மாவட்ட செய்திகள்

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு கமல்ஹாசன் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார் + "||" + Kamal Haasan sent her to the hospital in the car for the woman who was injured in the accident

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு கமல்ஹாசன் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு கமல்ஹாசன் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்
விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
நாகர்கோவில்,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்

அந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்தார். உடனே, அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டினர். 

தொடர்புடைய செய்திகள்

1. திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம் - கமல்ஹாசன்
திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்
திருபுவனம் அருகே படுகொலை செய்யப்பட்ட பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவியை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வழங்கினார்.
3. முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை ; ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-கமல்ஹாசன்
கமல்ஹாசனை விமர்சித்து முரசொலியில் கட்டுரை எழுதபட்டு உள்ளது. இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ இல்ல திருமண விழாவில் ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன் அமர்ந்து உரையாடினர்.
4. கமல்ஹாசன்-சித்தார்த்துடன் 8 நாடுகளில், ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு
பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு முதல்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
5. தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் கடலூரில் கமல்ஹாசன் பேச்சு
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று கடலூரில் கமல்ஹாசன் கூறினார்.