மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலித்த 43 தனியார் பஸ்கள் பறிமுதல் + "||" + 43 private buses were seized for higher charges

அதிக கட்டணம் வசூலித்த 43 தனியார் பஸ்கள் பறிமுதல்

அதிக கட்டணம் வசூலித்த 43 தனியார் பஸ்கள் பறிமுதல்
மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கடந்த மாதம் தனியார் பஸ் கட்டணத்தை மாநில போக்குவரத்து துறை நிர்ணயம் செய்தது.
புனே,

தனியார் பஸ் நிறுவனங்கள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக கட்டணத்தை  வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து புனே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக வெளியூர்களில் இருந்து புனே வந்த தனியார் பஸ்களில் அதிரடி சோதனையில் ஈடுபட் டனர். அப்போது பல பஸ் களில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அதிக கட்டணம் வசூலித்த 43 தனியார் பஸ்களை பறிமுதல் செய்தனர். மேலும் விதிமுறை மீறி செயல்பட்ட தனியார் பஸ் நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.12 லட்சம் அபராதம் வசூல் செய்தனர்.