மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் அருகே சேதம் அடைந்த சாலை பொதுமக்கள் சார்பில் சீரமைப்பு + "||" + Damaged road near Vithathikulam On behalf of the general public Conditioning

விளாத்திகுளம் அருகே சேதம் அடைந்த சாலை பொதுமக்கள் சார்பில் சீரமைப்பு

விளாத்திகுளம் அருகே சேதம் அடைந்த சாலை பொதுமக்கள் சார்பில் சீரமைப்பு
விளாத்திகுளம் அருகே கமலாபுரம் கிராம பகுதியில் சேதமடைந்த சாலை, பொதுமக்கள் சார்பில் சீரமைக்கப்பட்டது.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே கமலாபுரம் கிராம பகுதியில் சேதமடைந்த சாலை, பொதுமக்கள் சார்பில் சீரமைக்கப்பட்டது.

சேதமடைந்த சாலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரம் செல்லும் ரோட்டில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கமலாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 800–க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்துக்கு செல்லும் 1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த தார் சாலை கடந்த 2013–14–ம் ஆண்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து உள்ளனர். அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் வலியுறுத்தி கூறியும் சாலை சீரமைக்கப்படவில்லை.

பொதுமக்கள் சார்பில் சீரமைப்பு

இந்த நிலையில் அந்த 1 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் கமலாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டனர். இதற்காக வீடுதோறும் சாலை சீரமைப்புக்காக தங்களால் இயன்ற தொகையை கொடுத்தனர். இதில் பொதுமக்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் வசூல் ஆனது. இந்த தொகையில், சாலையில் உள்ள குண்டும் குழியுமான இடங்களில் சாலை சீரமைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயார்: கவர்னர் கிரண்பெடி சவால், நாராயணசாமி பதிலடி
பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயார் என்று கவர்னர் கிரண்பெடி சவால் விடுத்துள்ளார்.
2. தனியார் மண் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்
திருக்கடையூர் அருகே தனியார் மண் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் ரேஷன் கார்டை அரசிடம் திருப்பி ஓப்படைத்து, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்.
3. காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு கரூரில் பல்வேறு அமைப்பினர்-பொதுமக்கள் அஞ்சலி
காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு கரூரில் பல்வேறு அமைப் பினர்- பொதுமக்கள்அஞ்சலி செலுத்தினர். மேலும் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
4. வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று சென்றது பொதுமக்கள் மகிழ்ச்சி
மணப்பாறையில் நேற்று முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல தொடங்கியது. நீண்டநாள் கோரிக்கை நிறை வேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5. கொல்லிமலையில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் அரசு பஸ் தாமதமாக இயக்கப்படுவதாக புகார்
கொல்லிமலையில் அரசு பஸ் தாமதமாக இயக்கப்படுவதாக கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.