மாவட்ட செய்திகள்

திருநங்கையிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு 3 பேர் கைது + "||" + The transgender knife is shown Money flush Three arrested

திருநங்கையிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு 3 பேர் கைது

திருநங்கையிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு 3 பேர் கைது
திருநங்கையிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு சென்னையை சேர்ந்த 3 பேர் கைது கைது செய்தனர்.
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த நடராஜபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 32). திருநங்கையான இவர் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மதுராந்தகத்தை அடுத்த மேலவலம்பேட்டை என்ற இடத்தில் காரில் வந்த 3 பேர் வைஷ்ணவியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,100-ஐ பறித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22), அதே ஊரை சேர்ந்த சபரி (32), சென்னை ஓக்கியம் துரைபாக்கத்தை சேர்ந்த தீபக் (32) என்பது தெரியவந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தார். அவர்களிடம் இருந்து கத்தி, கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...