மாவட்ட செய்திகள்

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது + "||" + Artio Office corruption Rs. 2 lakhs were missing from the police

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது.
திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். அதன்பின்னர் அலுவலகத்திற்குள் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள மேஜை, பீரோக்கள், டிபன் பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதன்பிறகு அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களை தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்தனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. சோதனையின் போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 850-ஐ பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். நேற்று மாலை வரை இந்த சோதனை நடந்தது.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் மோகனன் உள்ளிட்ட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் துணை சூப்பிரண்டு வீடு, அலுவலகத்தில் ரூ.4.34 லட்சம் சிக்கியது லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனை
கிருஷ்ணகிரியில் போலீஸ் துணை சூப்பிரண்டு வீடு மற்றும் அலுவலகத்தில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.4.34 லட்சம் சிக்கியது.
2. குமரியில் கத்தை, கத்தையாக பணம் பறிமுதல்: 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது? லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி விளக்கம்
குமரி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய 2 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வது எப்போது? என்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
3. விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் பறிமுதல்
விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.8 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4. கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்
கொல்லங்கோடு அருகே கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.
5. திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் பெண் பயணியிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...