மாவட்ட செய்திகள்

வெள்ளகோவிலில் நூற்பாலையில் தீ விபத்து எந்திரங்கள் எரிந்து நாசம் + "||" + The spinning fire in the spine Machines are destroyed

வெள்ளகோவிலில் நூற்பாலையில் தீ விபத்து எந்திரங்கள் எரிந்து நாசம்

வெள்ளகோவிலில் நூற்பாலையில் தீ விபத்து எந்திரங்கள் எரிந்து நாசம்
வெள்ளகோவிலில் உள்ள நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டு எந்திரங்கள் எரிந்து நாசமாகின.

வெள்ளகோவில்,

வெள்ளகோவில்– மூலனூர் ரோட்டில் வி.எஸ்.என். நூற்பாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் கழிவு பஞ்சை அரைக்கும் எந்திரம் சூடானதால், அதில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த ஊழியர்கள் உடனே தீயை அணைக்க முயன்றதுடன், வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல்கொடுத்தனர். வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. மேலும் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி சம்பவஇடத்தை நேரில் பார்வையிட்டார்.