மாவட்ட செய்திகள்

பெண்களுக்கான சத்து + "||" + Women's nutrition

பெண்களுக்கான சத்து

பெண்களுக்கான சத்து
ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது.
ஆண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் இரும்பு சத்து போதுமானது. ஆனால் பெண்களுக்கு 18 மில்லி கிராம் தேவைப்படுகிறது. அதிலும் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் 27 மில்லி கிராம் வரை தேவைப்படும்.

கருவுற்றிருக்கும்போது குழந்தையின் வளர்ச்சிக்காக அதிக ரத்தம் தேவைப்படுகிறது. அதற்காகவும் பிரசவத்தின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டவும் போதுமான அளவு இரும்பு சத்து உடலுக்கு அவசியப்படுகிறது.

மேலும் மாதவிடாய் சுழற்சியின்போது ரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கவும் இரும்பு சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். சோயா பீன்சில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், செலீனியம் போன்றவைகளையும் உள்ளடக்கியது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ், வேர்க்கடலை உள்ளிட்டவைகளில் இரும்பு சத்து அதிகம். 30 கிராம் முந்திரி பருப்பில் 2 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது. இறைச்சியிலும் இரும்பு சத்து அதிகம் கலந்திருக்கிறது.

பூசணி விதை, இரும்பு சத்து நிரம்பப்பெற்றது. அதனை பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடலாம். உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவையும் இரும்பு சத்து அதிகம் கொண்டவை.

வாழைப்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி, ஓட்ஸ் மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அவற்றில் இரும்பு சத்து மட்டு மின்றி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இதர ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் செயல்படும்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக போலீஸ்துறையில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
2. பெண்கள் சுயமாக முன்னேற தொகுதிக்கு 5 ஆயிரம் பசுமாடுகள் வழங்க திட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
பெண்கள் சுயமாக தொழில் செய்து முன்னேற ஏதுவாக தொகுதிக்கு 5 ஆயிரம் பசுமாடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. டெல்லியில் கடந்த வருடத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 5 பெண்கள் கற்பழிப்பு
டெல்லியில் கடந்த வருடத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 5 பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
5. புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 29 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 29 பேர் காயமடைந்தனர்.