மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் + "||" + Sending to the First Minister to send the strike

முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
சாலை பணியாளர் பணியிடங்களை திறன்மிகு இல்லா உதவியாளர் பணியிடமாக மாற்றி 7-வது ஊதிய குழுவில் 1,900 தர ஊதியம் நிர்ணயம் செய்து ஊதிய கட்டில் வழங்கிட வேண்டும்.
கரூர்,

சாலை பணியாளர் பணியிடங்களை திறன்மிகு இல்லா உதவியாளர் பணியிடமாக மாற்றி 7-வது ஊதிய குழுவில் 1,900 தர ஊதியம் நிர்ணயம் செய்து ஊதிய கட்டில் வழங்கிட வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கும், பணிக்கொடைக்கும் பொருந்தும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் ஜூன் 11-ந் தேதி நடத்தப்படும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அந்த வகையில் நேற்று கரூரில் உள்ள தபால் அலுவலகத்தில், கரூர் உட்கோட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் தபால் பெட்டியில் கோரிக்கை தபால்களை போட்டு விட்டு சென்றனர். இதேபோல் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி பகுதிகளிலும் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றன. இதில் மொத்தம் 160 தபால்கள் முதல்-அமைச்சருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.