மாவட்ட செய்திகள்

பயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார் + "||" + Minister provided house construction work for beneficiaries

பயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்

பயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்
கலசபாக்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்.
கலசபாக்கம்

கலசபாக்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த 9 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி. மு.க. துணை செயலாளர் என்.துரை, மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, ஒன்றிய செயலாளர் எம்.திருநாவுக்கரசு, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்னர்-முதல்வர் மோதல் உச்சக்கட்டம்: மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை; கவர்னர் மாளிகை முன்பு நாராயணசாமி தர்ணா
மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
2. ‘தினசரி கதாநாயகன் சின்னதம்பி’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
தினசரி கதாநாயகன் சின்னதம்பியை காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
3. திருட்டு வி.சி.டி. முறையை தமிழக அரசு விரைவில் ஒழிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
திருட்டு வி.சி.டி. முறையை தமிழக அரசு விரைவில் முற்றிலும் ஒழிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
4. ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரி மாநிலத்திற்கு 90 சதவீதம் நிதி கிடைக்கும் அமைச்சர் கந்தசாமி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரி மாநிலத்துக்கு 90 சதவீத நிதி மத்தியில் இருந்து மானியமாக கிடைக்கும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
5. கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ‘ரோபோ‘ மூலம் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.