மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் + "||" + The joint action committee of the trade unions demonstrated the task of demanding 15 facets

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தொ.மு.ச. பேரவை கவுன்சில் செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் குமார், செயலாளர் முத்துக்குமரன், பா.ம.க. மாநில இணை பொதுச்செயலாளர் தங்க.ஜோதி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பாத.செம்மல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் ஆற்றலரசு, தொ.மு.ச. டாஸ்மாக் மாவட்ட செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து கடை ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய வெளிப்படையான சுழற்சிமுறை பணியிட மாறுதல் ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.