மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Taskmakers demonstrated in Namakkal

நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறை செய்து, அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உபரி ஊழியர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள நிரந்தர காலிப்பணியிடங்களில் பணி தொடர்ச்சியுடன், மாற்றுப்பணி வழங்க வேண்டும். அனைத்து கடை ஊழியர்களுக்கும் பொருந்தகூடிய வெளிப்படையான சுழற்சிமுறை பணியிடமாறுதல் ஆண்டுக்கு ஒருமுறை செய்திட வேண்டும். கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடும் மதுக்கூட உரிமைதாரர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15 கோரிக்கைகள்

பணியின்போது மரணம் அடைந்த கடை ஊழியர்களின் குடும்பத்தாருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அசோக், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாஸ்மாக் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.