மாவட்ட செய்திகள்

துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + The sweeping workers union demonstrated

துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை நகரசபையில் பணிபுரியும் சுய உதவிக்குழு மற்றும் ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.509.16 ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை நகரசபை முன்பு நேற்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை நகரசபை துப்புரவு தொழிலாளர் சங்க தலைவர் கோதண்டபாணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.