மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர் + "||" + The water in the courtyard was reduced to water Tourists Stand in the long queue and bathe

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது 
சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

தென்காசி,

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

குற்றாலம் சீசன்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டு சீசன் மே மாத இறுதியிலேயே தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் சில நாட்கள் சீசன் களை கட்டியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.

இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் வந்து குளித்து செல்கிறார்கள். கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை இல்லை. கடும் வெயில் அடித்தது. பலத்த காற்று வீசுகிறது. மாலைக்கு மேல் குளுமையான சூழல் நிலவுகிறது.

நீண்ட வரிசையில்...

மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயின் அருவியில் வெகுவாகவே தண்ணீர் குறைந்து விட்டது. ஐந்தருவியில் 3 கிளைகளில் மட்டும் தண்ணீர் சுமாராக விழுந்தது. பழைய குற்றாலத்திலும் குறைவாகவே தண்ணீர் விழுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் திருப்தி இல்லாமல் குளித்து சென்றனர். பலர் கேரளாவில் உள்ள பாலருவி போன்ற இடங்களுக்கு சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நேரு பூங்காவில் மழையால் அழுகிய மலர்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோத்தகிரி நேரு பூங்காவில் மழையால் மலர்கள் அழுகின. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
2. 13 நாட்களுக்கு பிறகு பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு 13 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
3. தனுஷ்கோடியில் தடையைமீறி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்; போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதம்
தனுஷ்கோடி பகுதியில் தடையை மீறி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்துவருகின் றனர். அவர்கைள கடலோர போலீசாரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
4. அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு
அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.
5. கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை