மாவட்ட செய்திகள்

சாலவாக்கம் அருகேகுடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Near Salavasam Public road blocking with empty huts to provide drinking water

சாலவாக்கம் அருகேகுடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சாலவாக்கம் அருகேகுடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சாலவாக்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்று பலமுறை புகார் கொடுக்கப்பட்டது. இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை காலி குடங்களுடன் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் சாலவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் சாலவாக்கம் -செங்கல்பட்டு சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலப்பாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் பொறுப்பாளர் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் பணியாற்றி வருகிறார்.

இதனால் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. விரைவில் குடிநீர் வழங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாழப்பாடி அருகே கியாஸ் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி மேம்பாலம் கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வாழப்பாடி அருகே கியாஸ் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மேம்பாலம் கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. காரில் உரசி சென்றதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: டிரைவரை தாக்கிய போலீசை கண்டித்து சாலை மறியல்
காரில் உரசி சென்றதை தட்டிக்கேட்டதால் டிரைவரை தாக்கிய போலீஸ்காரரை கண்டித்து, 50–க்கும் மேற்பட்ட கால்டாக்சி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளி மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தாராபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. தரைமட்ட பாலத்தை விரைந்து கட்ட கோரி ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில் தரைமட்ட பாலத்தை விரைந்து கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...