மாவட்ட செய்திகள்

என்ஜினீயர்களுக்கு வேலை + "||" + Work for engineers

என்ஜினீயர்களுக்கு வேலை

என்ஜினீயர்களுக்கு வேலை
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது டெபுடி என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்.), ராணுவத்திற்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபடும் இந்த நிறுவனத்தில் தற்போது டெபுடி என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 86 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 1-6-2018 தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு வி்ண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 11-7-2018-ந் தேதியாகும். இதற்கான நேர்காணல் 19-8-2018-ந் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.