மாவட்ட செய்திகள்

வங்கியில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் ரூ.90 ஆயிரம் பறிக்க முயற்சி + "||" + The girl who came out of the bank tried to snatch Rs 90,000

வங்கியில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் ரூ.90 ஆயிரம் பறிக்க முயற்சி

வங்கியில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் ரூ.90 ஆயிரம் பறிக்க முயற்சி
துறையூரில் பட்டப்பகலில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த பெண்ணை பின் தொடர்ந்து ரூ.90 ஆயிரத்தை பறிக்க முயற்சி நடந்தது. அந்த பெண் பணப்பையை இறுக்கி பிடித்துக்கொண்டதால் மோட்டார் சைக்கிளின் பின்னால் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.
துறையூர்,

துறையூர் அம்மாப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் நேற்று அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்று ரூ.90 ஆயிரம் எடுத்து அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார். அவர் பணம் வைத்திருப்பதை நோட்டமிட்ட 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த நபர் கிருஷ்ணவேணியிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றார். ஆனால், கிருஷ்ணவேணி பணப்பையை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

இதனால், அவர் வங்கியின் முன்பக்க சாலையில் இருந்து திருச்சி மெயின் பிரதான சாலை வரை சிறிது தூரம் தர, தர வென இழுத்து செல்லப்பட்டார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் கூச்சல் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி
பெரம்பலூர் போலீஸ் நிலைய கழிவறையில் வைக்கப்பட்டிருந்த பினாயிலை குடித்து பிரவீன் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
2. கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுக்காக அய்யப்ப பக்தர் தீக்குளிக்க முயற்சி நாகையில் பரபரப்பு
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுக்காக அய்யப்ப பக்தர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி தி.மு.க.வினர் 2 பேரை கொல்ல முயற்சி அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கைது
குத்தாலம் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிள் மீது காரை விட்டு மோதி தி.மு.க.வினர் 2 பேரை கொலை செய்ய முயன்றதாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. நடிகை வசுந்தராதாசை மானபங்கம் செய்ய முயற்சி - தலைமறைவான டிரைவருக்கு வலைவீச்சு
கார் செல்ல வழி விடாததால் நடிகை வசுந்தராதாசுடன் தகராறு செய்து, அவரை மானபங்கம் செய்ய முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
5. திருவரங்குளத்தில் ஒரே நாள் இரவில் 2 கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபரால் பரபரப்பு
திருவரங்குளத்தில் ஒரே நாள் இரவில் 2 கோவில்கள் உள்பட 4 இடங்களில் வாலிபர் திருட முயன்றார். அப்போது போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.