மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + All Youth Youth Demonstrators Demonstrate Demands

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,

திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் முருகேசு தலைமை தாங்கினார். மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜன் முன்னிலை வகித்தார்.

இளைஞர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சுஜாதா, பழனி, ஒன்றிய செயலாளர்கள் குமார், பாப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாய நிலங்களை அழித்து மேற்கொள்ளப்படும் சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

ஜனநாயக வழியில் போராடுபவர்களை குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் கைது செய்யும் செயலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.