மாவட்ட செய்திகள்

முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு + "||" + Even if the chief prime minister is not happy Kumaraswamy Speech

முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு

முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு
மாநில மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சியை புறக்கணித்து விட்டார்கள். முதல்-மந்திரியாக இருந்தாலும் நான் சந்தோஷமாக இல்லை என கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேசினார்.
பெங்களூரு,

ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், மந்திரி களாக பதவி ஏற்றவர்கள் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமிக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சார்பில் பெங்களூரு ஜே.பி.பவனில் நேற்று மதியம் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

சட்டசபை தேர்தலின் போது எனது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் முழு ஆதரவு அளித்தார்கள். அன்பை வெளிகாட்டினார்கள். மக்கள் என் மீது காட்டிய அன்பை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். ஜனதாதளம்(எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் என்று நினைத்தேன். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தான் மக்கள் நான் கொடுத்த வாக்குறுதிகளை ஏற்று கொள்ளவில்லை என தெரிந்தது. மக்கள் என்னையும், ஜனதாதளம்(எஸ்) கட்சியையும், எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் புறக்கணித்து விட்டார்கள்.

தேர்தல் பிரசாரத்தின் போது மாநில மக்கள் ஆதரவு அளித்தாலும், ஓட்டு போடும் போது ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களை மறந்து விட்டார்கள். நான் முதல்-மந்திரியானதால் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் சந்தோஷமாக உள்ளனர். ஆனால் நான் முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை. எனது தந்தை, தாயின் ஆசிர்வாதம், கடவுள் அருளால் முதல்-மந்திரி ஆனேன். 37 எம்.எல்.ஏ.க்கள் எனக்கு முழு ஆதரவு அளித்தனர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியில் முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளேன்.

12 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையின் எதிர்ப்பை மீறி முதல்-மந்திரி ஆனேன். தற்போது முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 2 மாதத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். நான் என்ன தவறு செய்தேன் என்பது தெரியவில்லை. ஆனால் மாநில மக்களின் அன்பை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன். மாநில மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதி, கல்வி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இதற்காக மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

நான் முதல்-மந்திரி பதவியை காப்பாற்ற விரும்பவில்லை. அதற்காக நேரத்தை செலவு செய்யவும் விருப்பம் இல்லை. இந்த பதவியில் இருக்கும் போது மாநில மக்களுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இதற்காக எந்த தொந்தரவு வந்தாலும், அதனை சரிசெய்து சிறப்பான ஆட்சியை மாநில மக்களுக்கு கொடுப்பேன்.

இவ்வாறு குமாரசாமி பேசினார். கண்ணீர் விட்டு அழுதார்

முன்னதாக விழாவில் பேச தொடங்கிய முதல்-மந்திரி குமாரசாமி, மாநில மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சியையும், தன்னையும் புறக்கணித்து விட்டதாக கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார். அதன்பிறகு நான் முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை என்று கூறிய போதும் கண்ணீர் விட்டு அழுதபடியே பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.

பாராட்டு விழாவில் மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, ஜி.டி.தேவேகவுடா, ஜனதாதளம்(எஸ்) பொதுச் செயலாளர் பிரஜ்வல் ரேவண்ணா கலந்து கொள்ளவில்லை. இது கட்சி தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. சபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் - எடியூரப்பா சொல்கிறார்
சட்டசபை சபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் என்று எடியூரப்பா கூறினார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மாநில தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கர்நாடகத்திற்கு ரூ.2,098 கோடி மட்டுமே கிடைக்கும் - குமாரசாமி பேச்சு
மத்திய அரசின், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கர்நாடகத்திற்கு ரூ.2,098 கோடி மட்டுமே கிடைக்கும் என முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
3. கவர்னருக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடிதம் : கர்நாடக அரசுக்கு ஆதரவு வாபஸ் ‘ஆட்சிக்கு ஆபத்து இல்லை’ - குமாரசாமி
கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றனர். இதுதொடர்பாக அவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த நிலையில் ஆட்சிக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்து உள்ளார்.
4. மேகதாது அணை விவகாரத்தில் தலையிட கோரிக்கை : பிரதமர் மோடியுடன் குமாரசாமி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், மேகதாது திட்ட பிரச்சினையில் தலையிடுமாறும், மகதாயி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் கோரிக்கை விடுத்தார்.
5. மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம் தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியா-பாகிஸ்தான் அல்ல பிரதமரை சந்தித்த பிறகு குமாரசாமி பேட்டி
தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியா–பாகிஸ்தான் அல்ல, மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம் என்று பிரதமரை சந்தித்த குமாரசாமி தெரிவித்தார்.